இந்திய ஊடகங்கள் அடக்குமுறையின் காலகட்டத்தில் இருக்கின்றன – பிரணாய் ராய்
பிரபல ஊடகவியலாளரும் NDTV யின் இணை நிறுவனருமான பிரணாய் ராய் இந்தியா மெக்கிராதியிசம் எனப்படும் அடக்குமுறையின் காலகட்டத்தில் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
மதிற்பிற்குரிய லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருதை பெற்றுக்கொண்ட அவர் தற்போது அரசியல்வாதிகள் எப்படி ஊடகங்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள் என்பதை விளக்கினார்.
அது பற்றி அவர் கூறுகையில் பொதுவாக ஊடகங்கள் மூன்று வகையில் கட்டுபப்டுத்தப்படுகின்றன. முதல் வகை பொதுமக்களின் கைக்களுக்கு செல்லாமல் தடுப்பது. அடுத்தது ஊடகங்களை அச்சுறுத்துவது, மூன்றாம் வகை மெக்கிராதியிசம்.
மெக்கிராதியிசம் என்பது அமெரிக்க வரலாற்றில் மிகவும் இருண்ட காலமாக கருதப்படும் காலகட்டம். இக்காலத்தில் FBI, வருமான வரித்துறை உட்பட அரசு எந்திரங்கள் அனைத்தும் ஊடகவியலாளர்களை குறிவைத்தது. முதல் உலக்கபோருக்கு பின்னர் பல முக்கிய ஊடகவியலாளர்கள், அரசியல் எதிரிகள் குறிப்பாக கம்மியுநிஸ்ட்கள் பெருவாரியாக குறிவைக்கப்பட்டனர்.
1950 களில் நிகழ்ந்த இந்த அரசியல் ஒடுக்குமுறை வழிகளில் பல பின்னாட்களில் சட்டத்திற்கு புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒடுக்குமுறைக்கு பலியானவர்கள் பலர் தங்களது நற்பெயரை மீண்டும் சம்பாதிப்பதற்கு பல காலம் பிடித்தது. இத்தகையதொரு சூழ்நிலை தான் தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது என்று பிரணாய் ராய் கூறியுள்ளார்.
அவர் சார்ந்த NDTV சானல் மீதும் அரசு வருமான வரித்துறையை கொண்டு அடக்குமுறை செய்ய நினைக்கிறது என்றும் சட்ட ரீதியாக அதனை தாங்கள் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் பா.ஜ.க ஆதரவாளர்களான ராம்ஜெத்மெலானி, சுப்பிரமணிய சாமி, எஸ்.குருமூர்த்தி ஆகியோர் NDTV க்கு எதிரான பிரச்சாரம் ஒன்றையும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த நிலை கடந்து போகும் என்றும் ஏனென்றால் இந்தியாவில் ஊடகங்கள் அவ்வப்போது அரசு கட்டுப்பாட்டுக்கு எதிராக போராடி வந்திருகின்றது, ஒவ்வொரு முறையும் இன்னும் அதிக சக்தியுடன் மீண்டு வந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இன்னும் ஊடகங்களை வளர்க்க பாருங்கள், நசுக்காதீர்கள். இந்திய மக்களுக்கு நமது ஊடகங்கள் மிகப்பெரிய சொத்து என்று கூறியுள்ளார்.
இந்திய ஊடகங்கள் அடக்குமுறையின் காலகட்டத்தில் இருக்கின்றன – பிரணாய் ராய்
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:17:00
Rating:
No comments: