மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!

தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் அனைத்து ஊடகங்களும் பெரிய தேர்தல் கட்சிகளின் அஜண்டாவை மையப்பத்தியே விவாதங்களை நடத்துகின்றன.
திட்டமிட்டு மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் இந்த விவாதங்களில் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்த பெரிய அதிகார மைய கட்சிகள் ’மக்கள் போராளிகள் போலவும், புரட்சிகர அரசியலை செய்வது போலவும் படம் போடுவதை காண சகிக்க முடியவில்லை.
பொதுமக்கள் மீது தேர்தல் அரசியல் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும் ஒரு நம்பிக்கையை வரவழைக்க முயலுகின்றனர்.
தேர்தல் கமிசனும் நேர்மையாக நடப்பது போன்று சராசரி மக்களை வதைத்துக் கொடுமை செய்து கொண்டிருக்கிறது. தனிப்பட்ட செலவுகளுக்கு எடுத்துச்செல்லும் பொதுமக்களின் நிதியை கேள்விக்குள்ளாக்குவதும், பெரிய கட்சிகளின் பணப்புழக்கத்தினை கேள்விக்குள்ளாமல் நழுவிச் செல்வதும் நடக்கிறது. பெரிய பணப்புழக்கம் இல்லாமல் எப்படி பெரிய மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன என்பது தெரியவில்லை.
முகநூலில் இருக்கும் தேர்தல் கட்சிகள் சாராத தோழர்களுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் எதை மறைக்கிறதோ அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு நம்முடையது.
நடுநிலையாளர்கள் என்கிற பெயரில் ‘எந்த அரசியல் கோட்பாட்டிற்கும், போராட்டத்திற்கும் சொந்தமில்லாத ‘சாம்பார்’வாசிகளை வைத்து நடக்கும் விவாதங்கள் மக்களை மொன்னையாக மாற்றுவதை தடுக்கப்படல் வேண்டும். கடந்த 5 வருடங்களில் தமிழகத்தின் அரசியல் சூழலை நிர்ணயித்த இயக்கங்கள், தலைவர்கள், போராளிகள் பங்குபெறாத விவாதங்களே இன்றய அரங்கினை நிரப்புகின்றன. இது திட்டமிடப்பட்ட ஒரு செய்தி பரவலை சாத்தியமாக்குகின்றன. இதை அம்பலப்படுத்த விரும்புகிறோம்.
ஒரு அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சியை பாதுகாக்கிறது. இதை பூசி மொழுகும் பணியை ஊடகங்கள் திறம்பட செய்கின்றன.
இக்கட்சிகளின் வெட்டி சவடால் அறிக்கைகளை கேள்விக்குள்ளாக்குவோம். அரசியல் சாசனத்தின் படியும், அரசின் வடிவமைப்பின் படியும், அரசின் வருவாயின் படியும், மசோதாக்களின் படியும் செய்ய இயலாத திட்டங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்ற அயோக்கியத்தனத்தினை அம்பலப்படுத்த முன்வாருங்கள்.
மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்துங்கள். தேர்தல் கட்சி தலைவர்கள் இவற்றிற்கு பொறுப்பேற்க செய்வோம்.
எம் முகநூல் பதிவுகள் மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்தவே பயன்படுத்தப்படும் என்கிற உறுதியோடு இதை முன்மொழிவோம்.
போலியான வாக்குறுதிகளோடு வடிவமைக்கப்படும் மாய செய்தி உலகில் இருந்து மக்களை விடுதலை செய்வோம்.
மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்! மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.