“என்னை மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா
மத்திய ஆட்சியாளர்கள், தன்னை கொலை செய்ய முயன்றதாகவும், அதற்காக அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புது விதமான சித்ரவதையை செய்ததாகவும் பேராசிரியர் சாய்பாபா கூறியுள்ளார்.
1990-ம் ஆண்டுகளில் சமூகநீதி, இடஒதுக்கீடு கோரிக்கைகளுக்காக போராடியவர் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. பின்னர் காவல்துறையின் போலி என்கவுண்ட்டர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத் தார். 2000-ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகப் பணியில் சேர்ந்த சாய்பாபா, 2009-ம் ஆண்டு அப்போதைய மத்திய காங்கிரஸ்அரசு துவங்கிய – ‘பசுமை வேட்டை’க்கு எதிராகவும் போராட்டங்களை துவக்கினார். அதைத் தொடர்ந்து மத்திய அரசால் கைது செய்யப்பட்ட சாய்பாபா நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நடக்க முடியாதநிலையில், சக்கர நாற்காலியோடு தான் பயணிக்க முடியும் என்ற நிலையில் சாய்பாபா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆதிவாசி மக்களிடையே நான் மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரச்சாரம் காரணமாக கைது செய்யப்பட்டேன். முட்டை வடிவ உயர்பாதுகாப்பு செல்லில் நான் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். முதல் தடவை சிறையில் அடைக்கப் பட்ட போது 27 முறை சிகிச்சைக்காக என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் இம்முறை சிறையில் உள்ள மருத்துவ மனைக்குக் கூட என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும் சிறை மருத்துவமனை அடுத்த தெருவில்தான் உள்ளது. மேலும் எனக்கு எந்த மருந்துகளும் கொடுக்கப்படவில்லை. என்னுடைய நோய்களின் மூலம் எனக்கு சிகிச்சை அனுமதி அளிக்காமல் அரசும், போலீசும் என்னை மெதுவாகக் கொலைச் செய்யப் பார்த்தனர்.
அவர்கள் என்னை சுட்டுவீழ்த்த வேண்டிய அவசியமில்லை.இப்படிச் செய்தாலே போதுமானது என்று அவர்கள் கருதியதாகவே நினைக்கத் தோன்றுகிறது. என்னால் எனது இடது கையை இப்போது தூக்க முடியவில்லை. பிறர் உதவியின்றி என்னால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல முடியவில்லை. என்னைப் போன்று சக்கர நாற்காலி யில் வளைய வரும் ஒரு வருக்கே அரசாங்கம் இவ்வாறு செய்ய முடியும் போது மற்றவர்கள் நிலை? சாமானிய மக்களுக்காகப் பேசும் அறிவுஜீவிகளை அச்சுறுத்துவதற்காகவே அரசு இவ்வாறு செய்கிறது. அடிமட்ட எதார்த்தங் களையும் உண்மைகளையும் பேச விடாமல் செய்ய ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கவே அரசு இப்படி செய்கிறது” என்று கூறியுள்ளார் சாய்பாபா.
“என்னை மெதுவாகக் கொல்லப் பார்க்கிறது அரசு”:பேராசிரியர் சாய்பாபா
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:36:00
Rating:
No comments: