SDPI கட்சி தோழர்களுக்கு....


SDPI கட்சி திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்ததிலிருந்து திமுகவையும், அதன் தோழமை கட்சிகளையும் ஒரு சில SDPI கட்சி தோழர்கள் விமர்சித்து வருகிறார்கள். கூட்டணியில் இருந்தால் கூட்டணியின் தலைவர்களை அளவிற்கு அதிகமாக புகழ்வது, கூட்டணியிலிருந்து வெளியே வந்தால் கடுமையாக இகழ்வது என்பது நமது நடைமுறை அல்ல. 

நமது பாதை தெளிவாக வரையறுக்கப்பட்டது. போராட்ட அரசியல். போராட்டத்தின் மூலமாக மக்களுக்கான உரிமைகளை பெறுவது. அதில் ஒரு சிறு பகுதிதான் தேர்தல் அரசியல் அதில் உள்ள அதிகாரம். அதிகாரம் நம்மிடையே இல்லையென்றாலும் நாம் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருப்போம். நம்மிடம் சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளமன்ற உறுப்பினரோ இல்லை. ஆனால் நாம் போராடி பெற்ற மக்கள் நலத் திட்டங்கள் பல. 
பல தேர்தல்களில் திமுகவின் வெற்றிக்காக நாம் உழைத்துள்ளதால், அவர்கள் நமக்கான அரசியல் அங்கீகாரத்தை வழங்க மறுக்கும்போது நமக்கு இயற்கையிலேயே கோபம் வரத்தான் செய்யும். இருந்தாலும் இதை ஒரு பெரிய குறையாக சொல்ல வேண்டியதில்லை. நமது மாநில தலைமையே கூட்டணியிலிருந்து வெளியே வந்ததிற்கான காரணங்களை பகிரங்கப்படுத்தவில்லை. திமுகவின் மீது கடுமையான விமர்ச்சனத்தையும் வைக்கவில்லை. பலர் கூட்டணிக்கு வருவதற்கு முன்பே திமுக கூட்டணியில் இணைந்தது SDPI கட்சிதான். அதற்குதான் முதலில் அவர்களுக்கு உரித்தான அங்கீகாரத்தை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் திமுக அதை செய்யவில்லை என்பது வருத்தம்தான்.

தேர்தல் அரசியலை பொறுத்தவரையில் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் நடைபெறத்தான் செய்யும். பெரிய கட்சிகள் நம்மைபோன்ற வளர்ந்து வருகின்ற சிறிய கட்சிகளை இப்படிதான் நடத்தும். இதற்கு கடந்த கால பல உதாரணங்கள் இருக்கின்றன. 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ள அண்ணன் வைகோ அவர்களுக்கு கூட இதுபோன்று கடைசி நேரத்தில் புறக்கணிப்பது நடந்துள்ளது. தற்போதைய தேர்தலிலும் பல கட்சிகளுக்கு நடந்துள்ளது. இந்த வாய்ப்பு மறுப்பு என்பது சகஜம்தான். இன்னும் இதைவிட பல சோதனைகள் காத்து இருக்கின்றன. 

எல்லாவற்றையும் கடந்துதான் நாம் செல்ல வேண்டும். நமக்கான அங்கீகாரம் போராட்ட அரசியலில் மக்கள் மனதில் தனி இடத்தில் இருக்கின்றது. தேர்தல் அரசியலில் கொஞ்சம் தள்ளி போகிறது அவ்வளவுதான். இதற்காக யாரையும் குறைகான வேண்டிய தேவை இல்லை. நாம் தனியாக போட்டியிடப்போகிறோம். ஒரு கட்சி தனித்து போட்டியிடும்போதுதான் அதன் தனித்துவத்தை இழக்காது என்று சொல்வார்கள். நமது தனித்துவத்தை நாம் நிலைநாட்டுவோம். 

கட்சியின் மிகப்பெரிய பலம் அதன் தன்னமில்லா தொண்டர்கள்தான். கடுமையாக உழைக்ககூடியவர்கள். ஆதலால் நமது கடுமையான உழைப்பை நாம் போட்டியிடும் தொகுதிகளில் செலுத்துவோம். தமிழக தேர்தல் அரசியலில் தனித்து வெற்றிபெறுவது கடினம்தான். தற்போது பல முனைபோட்டி இருப்பதால் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 

தோழர்களே! நமக்கான களம் ஏங்கி தவிக்கிறது. அதில் தீவிரமாக கவனம் செலுத்துவோம். திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு நாம் போட்டியிடும் தொகுதிகளில் நமது கவனத்தை செலுத்துவோம். தலைமை எந்தெந்த தொகுதி என்று அறிவித்தவுடனே பணிகளை ஆரம்பம் செய்துவிடுவோம்.

நமது கோபத்தையும், ஆதங்கத்தையும் களத்தில் காட்டுவோம். 
வெற்றிபெறுவோம்! வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவோம்!! 

- வி.களத்தூர் சனா பாரூக் 
SDPI கட்சி தோழர்களுக்கு.... SDPI கட்சி தோழர்களுக்கு.... Reviewed by நமதூர் செய்திகள் on 05:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.