முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜவாஹிருல்லா ஆதரவு!
சென்னை(20 பிப் 2018): பிப்ரவரி 20 ஆம் தேதி கொடைக்கானல் வனத்துறையினர் நடத்தும் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் 22 பேரை, கவுஞ்சி கிராமத்துக்குச் சுற்றுலாவிற்காக சென்றபோது அங்கிருந்த அரசுப் பள்ளிக்கு எதிரேயிருந்த வருவாய்த்துறைக்குச் சொந்தமான புல்வெளியில் நடனமாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வனத்துறையினர் இது வனத்துறைக்குச் சொந்தமான இடம் என்றும் வருவாய்த்துறையின் இடமில்லை எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுற்றுலாவிற்கு வந்த 12 நபர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
கொடைக்கானல் வனத்துறையினரின் மனிதாபிமானமற்ற இந்தச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தாக்குதலுக்கு உள்ளான நபர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
கொடைக்கானல் வனத்துறையின் இந்த மனித உரிமை மீறலைக் கண்டித்து கொடைக்கானல் அனைத்து கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் (20.02.2018) அன்று நடைபெறவிருக்கும் மாபெரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவளித்துப் பங்கேற்கும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முழு அடைப்பு போராட்டத்திற்கு ஜவாஹிருல்லா ஆதரவு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:51:00
Rating:
No comments: