அமித்ஷா பேரணி படுதோல்வி எதிரொலி: ஹரியானா பாஜக எம்.பி. பாஜக வில் இருந்து விலகல்
ஹரியானா மாநிலத்தில் அமித்ஷா நடத்திய பேரணி பெரிய வெற்றி என்று மக்கள் மத்தியில் நிறுவ பாஜக பெருமுயற்சி எடுத்து வந்த வேலையில் அந்த கூட்டத்தின் வீடியோ ஒன்று வெளியானது. அதன் மூலம் பாஜக பரப்புரை அனைத்தும் தவிடு பொடியாகின. இதனையடுத்து தற்போது ஹரியானா பாஜக எம்.பி. ராஜ் குமார் சைனி பாஜக வில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் தனது கட்சி சார்பாக வர இருக்கின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஹரியானாவில் 10 வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இவரது இந்த முடிவு பாஜக ஜாட் ஆதரவு நிலைபாட்டை எடுத்திருக்கும் காரணத்தால் என்று கூறப்படுகிறது.
இவர் வெகு நாட்களாக ஜாட் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர். மேலும் இந்த காரணத்தினால் தான் இவர் அமித்ஷா பேரணியிலும் பங்குகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர் அமித்ஷாவின் இந்த பேரணி கட்சியின் கொள்கைகளை மீறி நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அமித்ஷா தனது பேரணியில், ஒட்டு மொத்த ஹரியானாவும் காவி நிரமாக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அவரது பேரணி படு தோல்வியடைந்துள்ளது.
இந்த பேரணிக்கு மறுநாளே கட்சியில் இருந்து தனது விலகலை அறிவித்த ராஜ் குமார் சைனி தனது முடிவிற்கு கட்சி எடுக்கப்போகும் நடவடிக்கை எது பற்றியும் தனக்கு கவலை இல்லை என்று அவர் கூறியுள்ளார். இவரது இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த ஹரியானா பாஜக மாநில தலைவர் சுரேஷ் பரலா, இது குறித்து கட்சியின் தலைமைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமித்ஷா பேரணி படுதோல்வி எதிரொலி: ஹரியானா பாஜக எம்.பி. பாஜக வில் இருந்து விலகல்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:55:00
Rating:
No comments: