எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியின் வாகனத்தை தாக்கி அவரை கைது செய்த குஜராத் காவல்துறை


ஹெமாபேன் மற்றும் வன்கர் என்ற விவசாய குடும்பதினரிடம் இருந்து 2013 ஆம் ஆண்டு 22, 236 ரூபாய் பெற்றுக்கொண்ட பின்னும் அரசு ஒதுக்கப்பட வேண்டிய நிலத்தை ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதை கண்டித்து வட்கம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி போராடி வந்தார். இந்நிலையில் இதில் எந்தவித முன்னேற்றமும் நடைபெறாததை அடுத்து கடந்த வாரம் ஆட்சியரிடம் ஹெமாபேன் மற்றும் வன்கர் தீக்குளிக்கப் போவதாக மனு அளித்திருந்தனர்.
அதன் பின்னரும் எந்த வித நடவடிக்கை எடுக்கப் படாததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு வங்கர் தீக்குளித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பாதுகாப்பிற்கு காவல்துறையினர் இருந்தும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வன்கர் மேவானியின் ராஷ்டிரிய தலித் மன்ச் அமைப்பின் உறுப்பினர் என்பதால் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கண்டித்து நடை பெற இருந்த போராட்டத்தில் மேவானி பங்குகொள்ளச் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்தை மறித்து குஜராத் காவல்துறை அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் இருந்து வெளியேற்றி கைது செய்துள்ளது.
காவல்துறையின் இந்த அராஜகப் போக்கின் போது மேவானியின் வாகன சாவி உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மேவானியை அவரது வாகனத்தில் இருந்து காவல்துறை வெளியே இழுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது.
இது குறித்து மேவானியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்றில், “ஜிகேன்ஷ் மேவானி அவரது வாகனத்தில் இருந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் வெளியே இழுத்துச் செல்லப்பட்டார். அவரது வாகன சாவி உடைக்கப்பட்டுள்ளது. அவர் சாரன்பூர்ல் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற அமைதி போராட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் செல்கையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த போராட்டம் உயிரிழந்த பானுஜி குடும்பத்தினரின் கோரிக்கைகளை வலியுறுத்த நடத்தப்பட்டது.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் காவல்துறை ஜிக்னேஷ் மேவானியின் கைதை உறுதி செய்துள்ளது. அது தனது ட்விட்டர் பதிவில், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக் கிழமை உயிரிழந்த வன்கர் உடலை அவரது குடும்பத்தினர் பெற மறுத்ததால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக குஜராத் அரசு தெரிவித்திருந்தது. வன்கரின் குடும்பம் இந்த பிரச்சனை தொடர்பாகவும், குஜராத் முழுவதிலும் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை வழங்குவதில் நடைபெறும் முறைகேட்டை விசாரணை செய்யவும் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியின் வாகனத்தை தாக்கி அவரை கைது செய்த குஜராத் காவல்துறை எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானியின் வாகனத்தை தாக்கி அவரை கைது செய்த குஜராத் காவல்துறை Reviewed by நமதூர் செய்திகள் on 23:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.