ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா? - எம்.பாரூக் பதில்கள்


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா திடீரென்று ஒருநாள் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். "சிறு காய்ச்சால்தான்" என்று மறுநாள் மருத்துவமனை அறிக்கை கொடுத்தது. பிறகு நீர்சத்துக்குறைபாடு, சிறுநீரக குறைபாடு என பலவித குறைபாடுகளை சொல்லி உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களை எல்லாம் அழைத்து வந்து சிகிச்சை கொடுத்தார்கள். மொத்தம் 75 நாட்கள் சிகிச்சை பெற்றும் இறுதியில் மரணத்தை தழுவினார் ஜெயலலிதா. 

கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார், இட்லி சாப்பிட்டார், அறிக்கை கொடுத்தார், தொலைக்காட்சி பார்த்தார், பிரதமருக்கு தந்தி கொடுத்தார் என்று தினமும் ஒரு செய்தி சொன்னார்கள். ஒருகட்டத்தில் "ஜெயலலிதா முழுமையாக குணமடைந்துவிட்டார் அவர் விரும்பும்போது வீட்டிற்கு செல்லலாம்" என அப்போல்லோ நிர்வாகம் சார்பில் சொன்னார்கள். இப்படி இருக்க எப்படி திடீரென்று அவர் மரணத்தை தழுவி இருப்பார் என்று பலதரப்பிலும் வினா எழுப்பப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை யாரும் பார்க்க அனுமதிக்காதது கூடுதல் சந்தேகத்தை எழுப்புகிறது. ஏற்கனவே ஒருமுறை 'சுற்றி இருப்பவர்களால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது' என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். இவையாவையும் பொருத்தி பார்க்கும்போது ஜெயலலிதா மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே கருத வேண்டி இருக்கிறது.

அப்போல்லோ மருத்துவமனையின் சர்வரை லீஜியின் என்ற ஹேக்கர் குழு ஹேக் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஒருவேளை வெளிவந்தால் சில மர்மங்கள் விலகலாம்.

- எம்.பாரூக்
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா? - எம்.பாரூக் பதில்கள் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறதா? - எம்.பாரூக் பதில்கள் Reviewed by நமதூர் செய்திகள் on 04:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.