’ஜெ’ மரணம் சர்ச்சைகளுக்கு யார் காரணம்?


ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல தரப்பினரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஒரு பிரிவினர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவரும் நிலையில், அதிமுக தொண்டர்களே ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான திமுக இதுபற்றி எதுவும் பேசாதநிலையில் அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ இதுபற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் சமூக வலைதளங்களிலும் பொதுமக்களிடமும் அதிமுக தொண்டர்களிடமும் இது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஏராளமான கேள்விகள் உருவாக்கியுள்ளன. சமீபத்தில், நடிகை கவுதமி ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு இரண்டு கடிதங்கள் எழுதினார். அந்தக் கடிதங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி, “கவுதமி வதந்தி பரப்பும் கும்பலோடு இணைந்துவிடக் கூடாது” என்று கூறியிருந்தார். உண்மையில் கவுதமி, உள்ளிட்ட எவர் ஒருவரும் முதல்வர் உடல் நிலைபற்றி பேசுவதும், கடிதம் எழுதுவதும் வதந்தி அல்ல இயல்பாக எழும் கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு யார் காரணம் என்பதுதான் மிக முக்கியமான விஷயம்.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவை எவர் ஒருவரும் நேரில் பார்க்கவில்லை, அவரது புகைப்படங்களும் எதுவும் வெளிவரவில்லை என்னும் நிலையில் இரண்டு தொடர்புகள் மூலமாகவே அவரது நிலைபற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. ஒன்று அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கைகள். இன்னொன்று அதிமுக செய்தித் தொடர்பாளர்களின் ஊடகச் சந்திப்புகள். பெரும்பாலும் இந்த சந்திப்புகளில் சி.ஆர்.சரஸ்வதி, பொன்னையன் போன்றோர் அம்மா (ஜெயலலிதா) இயல்பாக இருப்பதாகவே கூறினார்கள். முதல்வரின் உடல்நிலை தொடர்பாக இவர்கள் பேச்சு ஒருபக்கம் என்றால் இன்னொருபக்கம் அவரது பெயரில் வெளியான அறிக்கைகள், கைரேகைகள் பல கேள்விகளை எழுப்பினர். விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைந்தபோது முதல்வர் பேசினார் என்று பரவிய செய்திகள் வதந்தி. அதை அதிமுக மறுக்காதநிலையில், திடீரென 4ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு 5ஆம் தேதி இறந்தார் முதல்வர்.
ஆக மொத்தம், மக்களிடம் இப்போது கேள்விகளும் சந்தேகங்களும் எழ அதிமுக-வினர் பரப்பிய செய்திகளே காரணம் என்னும்நிலையில், அதிமுக பிரமுகர்களே இப்போது எழுந்துள்ள கேள்விகளை வதந்திகள் என நிராகரிக்கிறார்கள். ஆனால் மக்களிடமும், பிரமுகர்களிடமும் எழுந்துள்ள கேள்விகளை வதந்தி என நிராகரிக்கலாம். ஆனால் கட்சித் தொண்டர்களிடம் உருவாகியுள்ள கேள்விகளை வதந்தி என நிராகரிக்க முடியாது அதற்கு அதிமுக பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
’ஜெ’ மரணம் சர்ச்சைகளுக்கு யார் காரணம்? ’ஜெ’ மரணம் சர்ச்சைகளுக்கு யார் காரணம்? Reviewed by நமதூர் செய்திகள் on 23:41:00 Rating: 5

No comments:

Powered by Blogger.