எருக்கம் பூக்களால் இத்தனை பயன்களா?


எருக்கம் பூக்களில் என்ன பயன் இருக்கப்போகிறது? என்று தான் பல பேர் நினைப்பார்கள். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு எருக்கம் பூ மாலையை சாத்துவார்கள். ஆனால், எருக்கம் பூவில் பல மருத்துவ குணங்கள் உண்டு என சித்த மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
எருக்கம் இலை நஞ்சு நீக்கல், வாந்தியுண்டாக்கல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றுதல், பசியுண்டாக்கும் குணத்தை உடையது.
பாம்பு கடித்தவருக்கு, இலையை அரைத்து, கையளவு உடனே கொடுத்தால், விஷம் நீங்கும். தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து, கடித்த இடத்தில் வைத்துக் கட்டலாம். இலைச்சாறு மூன்று துளி, 10 துளித் தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். 200 மி.லி. உலர்ந்த பூவின் பொடியை சிறிது சர்க்கரையுடன் இரண்டு வேளை சாப்பிட்டு வர வெள்ளைபடுதல், பால்வினை நோய், தொழுநோய் ஆகியவற்றின் தீவிரம் குறையும். வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், நோய்ப்புண்கள், ஆறாத காயங்கள் ஆகியவற்றை குணமாக்கும்.
எருக்கம் பூக்களால் இத்தனை பயன்களா? எருக்கம் பூக்களால் இத்தனை பயன்களா? Reviewed by நமதூர் செய்திகள் on 02:30:00 Rating: 5

No comments:

Powered by Blogger.