செஸ் வரியை உயர்த்த அவசரச் சட்டம்!

செஸ் வரியை உயர்த்த அவசரச் சட்டம்!

நடுத்தர மற்றும் எஸ்.யூ.வி. ரக கார்களின் மீதான செஸ் வரியை உயர்த்த இந்த வாரம் அவசரச் சட்டத்தை அமைச்சரவை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுத்தர கார்கள், எஸ்.யூ.வி. மற்றும் சொகுசு கார்களுக்கு ஜி.எஸ்.டி-யில் 15 சதவிகிதம் செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இவ்வகை கார்களுக்கான செஸ் வரியை 25 சதவிகிதமாக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், இதை அமல்படுத்த ஜி.எஸ்.டி. சட்டம், 2017இன் பிரிவு 8இல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
“அடுத்த சில தினங்களில் அவசரச் சட்டம் மூலம் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை ஆலோசித்து வருகிறது” என்று ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார். செஸ் வரியை உயர்த்துவதற்கு முன் சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கனரக தொழிற்சாலைத்துறை அமைச்சகங்களின் கருத்துகள் கேட்கப்பட்டும். சொகுசு கார்களுக்கான செஸ் வரியை உயர்த்துவதால் வாகனங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் என்று சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
செஸ் வரியை உயர்த்த அவசரச் சட்டம்! செஸ் வரியை உயர்த்த அவசரச் சட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.