இந்தியாவில் உயிர்வாழ முடியுமா? : ஆய்வு முடிவு!

இந்தியாவில் உயிர்வாழ முடியுமா? : ஆய்வு முடிவு!

2100 ஆம் ஆண்டில் இந்தியாவில் உயிர் வாழ்வது கஷ்டம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் போன்றவை காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரிசா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்கள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெப்ப அலைகளுக்கு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளில் கிட்டத்தட்ட 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் வருகின்ற 2100 ஆம் ஆண்டில் இந்தியாவில் உயிர்வாழ்வது கஷ்டம் என்று அறிவியல் முன்னேற்றங்கள் என்ற ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பூமியின் வெப்ப நிலையை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஈரப்பதம் சேர்ந்தது என்றும், மற்றொன்று ஈரப்பதம் சேராதது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். காற்றின் ஈரப்பதம் ஆவியாகியப் பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக கருதப்படுகிறது. இந்த வெப்பநிலை வரும் 2100ம் ஆண்டு இந்தியாவில் 35 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அப்போது அதிக வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதம் குறைவு போன்றவற்றால் மனித உடல் தகுதி இழந்து நோய்களும், மரணமும் அதிகரிக்கும் என்றும், நல்ல உடல் நலத்துடன் இருப்பவர் கூட மரணத்துக்கு தப்ப முடியாது என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாலும், கங்கை, சிந்து சமவெளிப்பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உயிர்வாழ முடியுமா? : ஆய்வு முடிவு! இந்தியாவில் உயிர்வாழ முடியுமா? : ஆய்வு முடிவு! Reviewed by நமதூர் செய்திகள் on 04:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.