இறக்குமதிக்குத் தடை : பருப்பு விலை உயர்வு!

இறக்குமதிக்குத் தடை : பருப்பு விலை உயர்வு!

பருப்பு இறக்குமதி மீதான தடையாலும், தேவை அதிகரித்துள்ளதாலும், பருப்பு வகைகளின் விலை அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதால், சந்தையில் பருப்பு வகைகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும் பாமாயில், கடலெண்ணெய் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த ஏழு மாதங்களாகக் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் பருப்புகளை விற்பனை செய்யும் நோக்கில், பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் பழைய பருப்புகளின் தரம் குறைவாக இருக்கும் என்ற அச்சத்தால் பருப்புகளை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால் பருப்பின் தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்ததால், விலையும் அதிகரித்து விட்டது. கடலைப் பருப்பின் விலை மூட்டைக்கு 300 ரூபாயாக அதிகரித்துள்ளது. உளுத்தம் பருப்பின் விலை மூட்டைக்கு 500 ரூபாயாகவும், பாசிப்பருப்பின் விலை மூட்டைக்கு 600 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. வரிகளுடன் சேர்த்து, கடலெண்ணெய் மற்றும் பாமாயிலின் விலை ஒரு டின்னுக்கு 50 ரூபாய் அதிகரித்துள்ளது.
இறக்குமதிக்குத் தடை : பருப்பு விலை உயர்வு! இறக்குமதிக்குத் தடை : பருப்பு விலை உயர்வு! Reviewed by நமதூர் செய்திகள் on 04:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.