தமிழகத்துக்கு எப்போது நிரந்தர கவர்னர்?

தமிழகத்துக்கு எப்போது நிரந்தர கவர்னர்?

‘தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கண்காணிக்க தமிழகத்துக்கு நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும்’ என்று வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மதிமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்தப்படும். அதுபோல் இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்வீரர் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதிமுக-வுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.
நீட் தேர்வைப் பொறுத்தவரை தமிழக அரசுக்கு மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. ஏழை - எளிய மாணவர்களின் டாக்டர் கனவு தகர்ந்துவிட்டது. நீட் தேர்வைப் போல் பொறியியல் படிப்புக்கும் நுழைவு தேர்வு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் நிலை கேலிக்கூத்தாகி உள்ளது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கண்காணிக்க தமிழகத்துக்கு நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்துக்கு எப்போது நிரந்தர கவர்னர்? தமிழகத்துக்கு எப்போது நிரந்தர கவர்னர்? Reviewed by நமதூர் செய்திகள் on 04:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.