இறக்குமதி: காகித உற்பத்தி பாதிப்பு!

இறக்குமதி: காகித உற்பத்தி பாதிப்பு!

இந்தியச் சந்தையில் அதிகரித்துவரும் காகித இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் இந்தியா 14.17 லட்சம் டன் அளவிலான காகித இறக்குமதி செய்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 28 சதவிகிதம் கூடுதலாகும். இது உள்நாட்டில் காகிதத் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய காகித தயாரிப்புக் கூட்டமைப்பு, இந்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கையில் காகித இறக்குமதி மற்றும் காகித தயாரிப்புப் பொருள்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் காகித இறக்குமதி அதிகரித்துள்ளது. மேலும், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் காகித இறக்குமதி அதிகரித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 15.8 சதவிகிதம் இறக்குமதி அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் காகிதத்தின் விலையும் உள்நாட்டுச் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் காகித விலையை விடக் குறைவாக உள்ளது. எனவே இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் காகித உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் சவுரப் பங்கர் கூறும்போது, “இந்தியா காகிதத் துறையில் வளர்ந்து வரும் நாடாக உள்ளது. இந்தியாவின் அதிகரித்துவரும் காகிதத் தேவையைப் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் காகிதங்களே பூர்த்திசெய்து வருவதால் உள்ளூர் உற்பத்தி விற்பனையாகாமல் முடங்கிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
இறக்குமதி: காகித உற்பத்தி பாதிப்பு! இறக்குமதி: காகித உற்பத்தி பாதிப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 04:25:00 Rating: 5

No comments:

Powered by Blogger.