தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு!

தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு!

உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று (ஆகஸ்ட் 28) பதவியேற்றார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜெ.எஸ். கேஹரின் பதவிக்காலம் கடந்த வெள்ளியன்று நிறைவு பெற்றது. அவர் பதவியில் இருந்த காலத்தில் இரண்டு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். ஆதார் வழக்கில் தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்று உத்தரவிட்டது மற்றும் உடனடி முத்தலாக் முறைக்குத் தடை விதித்தது என்று அவரது இரண்டு தீர்ப்புகளும் சிறப்பு வாய்ந்தவை.
அவர் ஓய்வு பெறுவதையடுத்து தீபக் மிஸ்ரா புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் 45வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள தீபக் மிஸ்ரா, 1953–ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பிறந்தவர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். 1977–ம் ஆண்டு, பிப்ரவரி 14ம் தேதி தன்னை வக்கீலாகப் பதிவு செய்து கொண்டார்.
அரசியல் சாசனம், சிவில், கிரிமினல், வருவாய், பணிகள், விற்பனை வரி எனப் பல துறை வழக்குகளிலும் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளார். திரையரங்குகளில் தேசிய கீதத்தைக் கட்டாயமாக்கியது, உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தது போன்றவை இவரது முக்கிய தீர்ப்புகளாக பார்க்கப்படுகிறது. கடந்த 2011 அக்டோபர் 10ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வரை 13 மாதங்கள் பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு! தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவியேற்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 04:36:00 Rating: 5

No comments:

Powered by Blogger.