கலகக் குரல் எழுப்பும் விருதுகளின் நாயகி!

கலகக் குரல் எழுப்பும் விருதுகளின் நாயகி!

தினப் பெட்டகம் – 10 (24.11.2018)

இன்று அருந்ததி ராயின் பிறந்தநாள்.
1. அருந்ததி ராயின் முழுப் பெயர் சூசன்னா அருந்ததி ராய்.
2. அருந்ததி ராய் In Which Annie Gives It Those Ones (1989), Electric Moon (1992) என்ற இரு படங்களுக்கும் திரைக்கதை எழுதியிருக்கிறார். 1989ஆம் ஆண்டில், சிறந்த திரைக்கதை விருதை தேசிய விருது பெற்ற In Which Annie Gives It Those Ones என்ற படத்திற்காகப் பெற்றார்.
3. 1992ம் ஆண்டில் The God of Small Things என்ற நாவலை எழுதத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டிக் எழுதி முடித்து, 1997ஆம் ஆண்டு வெளியானது The God of Small Things. அவ்வாண்டுக்கான மன் புக்கர் பரிசை இந்த நாவல் பெற்றது.
4. இப்புத்தகம் நியூ யார்க் டைம்ஸின் ‘ஆண்டின் குறிப்பிடத்தக்க புத்தகங்கள்-1197’ என்ற பட்டியலில் இடம்பெற்றது.
5. 1997இன் இறுதியில், டைம் இதழ், இப்புத்தகம் அந்த ஆண்டின் பெஸ்ட் செல்லர்களுள் ஒன்று என்று குறிப்பிட்டது.
6. 2004ஆம் ஆண்டில், அருந்ததி ராய்க்கு Sydney Peace prize வழங்கப்பட்டது.
7. அருந்ததி ராயின் முதல் நாவலுக்குப் பிறகு 20 ஆண்டுகள் கழித்து அவரது இரண்டாவது நாவல் The Ministry of Utmost Happiness கடந்த ஆண்டு வெளியானது. இடைப்பட்ட காலத்தில் முழுவதும் கட்டுரைகளை எழுதுவதில் கவனம் செலுத்தினார். இந்தக் கட்டுரைகள் சகல விதமான அதிகார சக்திகளுக்கும் எதிரான கூர்மையான விமர்சனங்களாகவே அமைந்துள்ளன.
8. The Algebra of Infinite Justice என்ற கட்டுரைத் தொகுப்பிற்காக, 2006ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. ஆனால், இந்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதை ஏற்க மறுத்துவிட்டார். தலித் உரிமைகளை முன்னிறுத்தித் தொடர்ந்து எழுதிவரும் அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ‘அம்பேத்கர் சுடர்’ விருது 2015ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
9. 2011ஆம் ஆண்டில் Distinguished Writing, Norman Mailer Prize விருதைப் பெற்றார்.
10. 2014ஆம் ஆண்டின் டைம் பத்திரிக்கையின் டாப் 10 உலகின் செல்வாக்கு மிக்க மனிதர்களின் பட்டியலில் இடம் பெற்றார் அருந்ததி ராய்.
-ஆஸிஃபா
கலகக் குரல் எழுப்பும் விருதுகளின் நாயகி! கலகக் குரல் எழுப்பும் விருதுகளின் நாயகி! Reviewed by நமதூர் செய்திகள் on 23:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.