ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு சீட் பெல்ட்!

ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு சீட் பெல்ட்!

ரிசர்வ் வங்கியின் உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு சீட் பெல்ட் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே அதிகரித்துள்ள மோதல்போக்கு குறித்த தனது கருத்தை இ.டி நவ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ரகுராம் ராஜன் வெளிப்படுத்தியுள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “அரசாங்கம் ஓட்டுநர் என்றால், ரிசர்வ் வங்கிதான் சீட் பெல்ட். அதை அணிய வேண்டுமா என்பதை அரசு முடிவு செய்யட்டும். ரிசர்வ் வங்கி எப்போதும் பொருளாதார நிலைகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றால் அரசு ரிசர்வ் வங்கிக்கு அதிக உரிமைகளை வழங்க வேண்டும். ரிசர்வ் வங்கி விபத்தை தடுப்பதைப் பற்றி யோசிக்கிறது. மோசமான விபத்து நடைபெறாமல் ஒரு நிலையான பொருளாதார நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணுகிறது.
ஆனால் ஓட்டுநர் சாதாரணமாக ஓட்டவே எண்ணுகிறார். எந்தத் தடைகளும் இல்லாமல் பயணிக்க வேண்டுமென்று விரும்புகிறார். ஆனால் அவர்கள் சீட் பெல்ட் எவ்வளவு அவசியம் என்பதை உணர வேண்டும். ஏனென்றால் வருமுன் காப்பதுதான் சிறந்தது. நான் ஆளுநராக இருந்தபோதே இதைத் தளர்த்துங்கள், அதைத் தளர்த்துங்கள் என்று எண்ணற்ற கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும். பொருளாதார நிலைகளைக் கருத்தில் கொண்டு மிகக் கவனமாக நாங்கள் அதை வேண்டாமென்று நிராகரித்தால், மீண்டும் 2 நாட்களுக்குப் பிறகு வேறொரு கடிதம் வரும்” என்று கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு சீட் பெல்ட்! ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு சீட் பெல்ட்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.