பாபரி மஸ்ஜித் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரும் ஹிந்து மகா சபாவின் மனு நிராகரிப்பு

புது டில்லி: இன்று (திங்கள் கிழமை) உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்ட பாபரி மஸ்ஜித் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே கவுல் ஆகியோர் முன்பு அறிவித்தபடியே ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற பென்ச் முன்பு விசாரணைக்கு வரும் என்று தீர்ப்பளித்தனர்.
” நாங்கள் முன்னரே இது குறித்து உத்தரவிட்டுள்ளோம். இந்த வழக்கு ஜனவரியில் தான் விசாரணைக்கு வரும். உங்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். இவ்வழக்கை அகில பாரத ஹிந்து மாஹாசபாவின் வழக்கறிஞரான பருண் குமார் பதிவு செய்திருந்தார்.
இந்த தீர்ப்பு குறித்து சங்கப்பரிவார தலைவர்கள் ஆக்ரோஷமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (RSS) அமைப்பின் பொதுச்செயலாளர் பய்யாஜி ஜோஷி “இது இந்துக்களை இழிவுபடுத்தும் உத்தரவு” என்று தெரிவித்துள்ளார்.
“நம்பிக்கை சார்ந்த விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதை அனுமதிக்க முடியாது, இந்துக்களின் பொறுமை கைமீறி போகிறது” என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு பாஜக தலைவர்களும் ராமர் கோவில் கட்டுவதற்கு லோக் சபாவில் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.
முன்னதாக அலஹாபாத் உயர்நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரித்து உத்தரவிட்டதை தொடர்ந்து இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.
பாபரி மஸ்ஜித் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரும் ஹிந்து மகா சபாவின் மனு நிராகரிப்பு பாபரி மஸ்ஜித் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரும் ஹிந்து மகா சபாவின் மனு நிராகரிப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 03:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.