தேசியத்தின் பெயரில் போலிச் செய்திகள்!

தேசியத்தின் பெயரில் போலிச் செய்திகள்!

தேசியவாத அலை என்ற பெயரில் இந்தியாவில் வலதுசாரிக் கொள்கையாளர்களால் போலிச் செய்திகள் விரைவாகப் பரவுவதாக, பிபிசி நிறுவனம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
போலிச் செய்திகள் குறித்து பிபிசி செய்தி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியா, கென்யா மற்றும் நைஜீரியாவில் ’Beyond Fake News’ என்ற பெயரில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், உண்மைகளை விட நாட்டுப்பற்று சம்பந்தமான போலிச் செய்திகள் மக்களிடையே முக்கியத்துவம் பெறுவதாகத் தெரியவந்துள்ளது. “போலிச் செய்தி குறித்து தெரிந்துகொள்வதற்கு ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. இந்தியாவைச் சேர்ந்த 16,000 பேரின் ட்விட்டர் கணக்குச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில், போலிச் செய்திகளுக்கும், பிரதமர் நரேந்திர மோடி ஆதரவாளர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது” என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, கென்யா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட மூன்று நாடுகளிலும், தங்களுக்கு வரும் செய்திகளைச் சரியாகப் படிக்காமலும், அதனுடைய உண்மைத்தன்மையை அறியாமலும், மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் அப்படியே அவற்றை பார்வர்டு செய்கின்றனர் மக்கள்.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் சிலர் மட்டுமே போலிச் செய்திகளுக்கான மூலம் எங்குள்ளது என்பது குறித்துக் கேட்டுள்ளனர். போலிச் செய்திகளைக் கண்டுபிடிக்கும் திறன் தங்களிடம் இருக்கிறது என சிலர் அதீத நம்பிக்கை கொண்டுள்ளது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தை கடத்தல் போன்ற பல தவறான செய்திகளால், இந்தியாவில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“வாட்ஸ் அப்பில் பரவும் தவறான செய்திகளால் ஏற்படும் வன்முறைகள் குறித்து தெரிந்துகொள்ள, மற்ற ஆராய்ச்சியாளர்கள் மெக்சிகோ நாட்டுக்குச் சென்றுள்ளனர். இதில் ஒரு முடிவுக்கு வருவதற்கு, மூன்று நாடுகளைச் சேர்ந்த 80 பேருடன் பல நூற்றுக்கணக்கான மணி நேரம் செலவழித்தோம். இதில், 16,000 ட்விட்டர் கணக்குகள் மற்றும் 3,000 ஃபேஸ்புக் பக்கங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சமூக வலைதளங்களில் இளைய தலைமுறையினரின் ஈடுபாடும், வாட்ஸ் அப்பில் வரும் தகவலால் ஒரு கிராமத்தையே வன்முறைக் கும்பலாக மாற்றுவதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. பொய்ச் செய்திகளால் ஏற்படும் வன்முறை குறித்துக் கவலைப்படும் மக்கள், அதைப் பகிரும்போது கவலைப்படுவதில்லை” என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத்தின் பெயரில் போலிச் செய்திகள்! தேசியத்தின் பெயரில் போலிச் செய்திகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.