மதக்கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியுமா?


ஒரு இந்துப் பெண் கற்பழிக்கப்பட்டு இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டதாகக்கூறி மீரட்டில் மிகப்பெரிய கலவரத்தை நடத்தின சங்பரிவார அமைப்புகள்.
மதமாற்றம் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை ஜெயதி பாரதம் போன்ற அரசுசாரா அமைப்புகள் அறிக்கை வெளியிடுவதை மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறது உச்சநீதி மன்றம்.
2014 ல் ஏப்ரல் முதல் சூன் வரை மூன்று மாத காலத்தில் நாடு முழுக்க நடைபெற்ற 149 கலவரங்களில் உத்தரப்பிரதேசத்தில் 32 கலவரங்களும், மகாராஷ்டிராவில் 26 கலவரங்களும், மத்தியபிரதேசத்தில் 17 கலவரங்களும் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதே போல 2013 ல் நாடு முழுக்க நடைபெற்ற 823 கலவரங்களில் உத்தரப் பிரதேசத்தில் 247 கலவரங்களும், மகாராஷ்டிராவில் 88 கலவரங்களும், மத்தியபிரதேசத்தில் 84 கலவரங்களும், கர்நாடகாவில் 73 கலவரங்களும், குஜராத்தில் 68 கலவரங்களும் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் மதக்கலவரங்கள் தேவைப்படுகிறது. அதே போல பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் அக்கட்சிக்கு மதக்கலவரங்கள் தேவைப்படுகிறது. எனவே, மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் மதக்கலவரங்கள் அதிகரித்துவிட்டன என்பது ஒன்றும் ஆச்சரியம் தரக்கூடிய செய்தியோ அல்லது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியோ அல்ல. மதக்கலவரங்களே நடக்கவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும்.
சங்பரிவார அமைப்புகளின் வளர்ச்சிக்குப் பிறகே இந்தியாவில் மதக் கலவரங்கள் அதிகரித்துள்ளன. எனவே, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் நீடிக்கும் வரை மதக்கலவரங்கள் தொடரவே செய்யும்.
நன்றி : ஊரான்
மதக்கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியுமா? மதக்கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 03:46:00 Rating: 5

No comments:

Powered by Blogger.