பாஜகவில் இணைந்த ஆந்திர மாநில காவல்துறை முன்னால் இயக்குனர் (DGP).


பாஜகவில் இணைந்த ஆந்திர மாநில காவல்துறை முன்னால் இயக்குனர் (DGP).
ஆந்திர மாநில மாநில முன்னாள் காவல்துறை ஆணையர் டி ஜி பி தினேஷ் ரெட்டி அமீத் ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்துள்ளார்...இவர் கடந்த வருடம் தான் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ..
இவர் பதவியில் இருக்கும் போது நடந்த ஆந்திர குண்டு வெடிப்பு வழக்குகளில் பொய்யான குற்றசாட்டுக்களின் பெயரில் அநீதமாக முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டது , கொடுமை செய்யப்பட்டதும் அதற்கு எதிராக மனித உரிமை கமிசன் இவருக்கு எதிராக புகார்கள் கூறப்பட்டதும் மனித உரிமை கமிசன் இவரை ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது..
மேலும் இவரின் நடவடிக்கைகள் பாசிச சக்திகளுக்கு ஆதரவாக உள்ளது , ஹைதராபாத்தில் வகுப்பு வெறியாட்டம் அதிகரிக்ககாரணம் , மேலும் இவர் ஆந்திர சட்டநிலை சம்பந்தமாக இஸ்ரேலிய அதிகாரிகளிடம் உரையாடியது என இன்னும் பல குற்றசாட்டுக்களுடன் இவரை அதிகாரத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆந்திர மாநில காங்கிரஸ் அரசுக்கு 2012 ஆம் ஆண்டு பாப்புலர் பிரட் ஆப் இந்தியாவின் ஆந்திர மாநில பிரிவு இவருக்கு எதிராக குற்றம் சாட்டியிருந்ததும்... இப்பொழுது இவர் எந்தமாதிரியாக நீதமான முறையில் விசாரணை நடத்தியிருப்பார் என்ற பி எப் ஐயின் குற்றசாட்டுக்கள் நிரூபணம் ஆகியுள்ளது.
பாசிச அமைப்புக்கள் எப்படி எல்லாம் அதிகார சபையில் தங்களுக்கு சாதகமானவர்களை பணியமர்துகிறது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்படுபவையாக உள்ளது . இதற்கு முன்னர் இஸ்ரத் ஜஹான் படுகொலை வழக்கின் விசாரணை அதிகாரி பாஜகவில் இணைந்தது , முன்னாள் ராணுவ அதிகாரி உள்ளிட்ட பலர் பாஜகவில் இணைந்தது என தேசத்தின் மத சார்பின்மையை , நேர்மையை கேள்வி எழுப்புவதாக உள்ளது..
பாஜகவில் இணைந்த ஆந்திர மாநில காவல்துறை முன்னால் இயக்குனர் (DGP). பாஜகவில் இணைந்த ஆந்திர மாநில காவல்துறை முன்னால் இயக்குனர் (DGP). Reviewed by நமதூர் செய்திகள் on 02:43:00 Rating: 5

No comments:

Powered by Blogger.