சஹாரன்பூர் கலவரத்தை பா.ஜ.க. தூண்டியதாக விசாரணைக்குழு அறிக்கை!
சஹாரன்பூர்: உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் கலவரத்தைத் தூண்டியது பா.ஜ.க.எம்.பி. ராகவ் லக்கன் தான் என விசாரணைக்குழு அறிக்கை அளித்துள்ளது.
கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலம், சஹாரன்பூர் மாவட்டத்தில், இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் 3 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பான தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையை உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவிடம் விசாரணைக்குழு அளித்துள்ளது. அந்த அறிக்கையில், இந்த கலவரத்தை பா.ஜ.க. எம்.பி. ராகவ் லக்கன் தான் தூண்டினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹாரன்பூர் கலவரத்தை பா.ஜ.க. தூண்டியதாக விசாரணைக்குழு அறிக்கை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:59:00
Rating:

No comments: