லாலுவுடன் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்துவோம்: நிதிஷ்குமார்!
சாப்ரா: லாலுபிரசாத் யாதவுடன் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்துவோம் என்று பிகார் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சாப்ரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நிதிஷ்குமார், "20 ஆண்டுகளுக்கு முன்பு, லாலு பிரசாத் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரிடம் இருந்து விலகினேன். இனி, ஒன்றுபட்டு செயல்படப் போகிறோம். அதன்மூலம் பிகாரில், பாரதிய ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்த போகிறோம்" என்றார்.
மேலும் லாலு பிரசாத் யாதவும் நிதிஷ் குமாருடன் இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
லாலுவுடன் இணைந்து பா.ஜ.கவை வீழ்த்துவோம்: நிதிஷ்குமார்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:01:00
Rating:

No comments: