பாஜக ஆட்சியில் தொடர்ந்து விடுதலையாகும் பயங்கர குற்றவாளிகள்


  • சண்டிகர், ஆக.29_ 2007-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் நட்பு தொடர்வண்டியான சம்ஜோதா தொடர் வண் டியில் குண்டு வைத்த முக்கிய குற்றவாளியான அசிமானந்தாவை பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன் றம் இன்று பிணையில் விடுதலை செய்தது.  இந்திய - பாகிஸ்தான் நல்லுறவைக் கெடுக்கும் வகையில் சம்ஜோதா தொடர்வண்டியில் குண்டுவைக்கப்பட்டது.
  • 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த இந்தச் சம்பவத்தில் 68 பேர் இறந் தனர். 100-க்கும் மேற்பட் டோர் பலத்த காயமடைந் தனர். உண்மையை வெளிக் கொணர்ந்த ஹேமந்த் கர்க்கரே
  • ஆரம்பத்தில் இது லஷ்கர்-எ-தையபா வின் வேலை என்ற கோணத் தில் பார்க்கப்பட்டது, ஆனால் மும்பை தாக்கு தலில் மரணமடைந்த ஹேமந்த் கர்க்கரே என்ற தீவிரவாத தடுப்புப் பிரிவு அதிகாரியின் தலைமை யில் தீவிர விசாரணையில் சில இந்துத்துவ அமைப் புகள் தான் இந்த தாக்கு தலில் ஈடுபட்டன என்று தெரியவந்தது, இதன டிப்படையில் ராணுவ மேஜர் புரோகித், அசி மானந்தா, உட்பட 17- பேரைக் கைது செய்தனர்.
  • சாமியாரான அசிமானந்த் இந்த வெடிகுண்டு வெடிப்பிற்குத் திட்டம் தீட்டி நிதி திரட்டித் தந்தவர். இவர் இந்த குண்டுவெடிப்பின் முதன்மைக் குற்றவாளி யாக சேர்க்கப்பட்டு விசா ரணை நடந்து கொண்டு இருந்தது.
  • இந்த நிலையில் இவரது உடல் நிலையைக் காரணமாக கொண்டும், இவர் சார்ந்த அமைப்பு தற்போது கலைக்கப்பட்டு விட்டதாகவும், இவரால் தொடர்குண்டுவெடிப்பு விசாரனையில் எந்த பாதிப்பும் வராது என்ற அசீமானந்தாவின் வழக்குரைஞர் வாதத்ததை அடுத்து, பஞ்சாப் -ஹரி யானா உயர்நீதிமன்றம் அசிமானந்தாவை விடுதலை செய்தது.
  • அசிமானந்தா தேவைப்படும் போது பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் அனு மதியுடன் இந்தியாவின்  பிற மாநிலங்களுக்குச் செல்லலாம் என்றும் அடுத்த விசாரணையில் உடல் நிலை ஒத்துக் கொள்ளும் நிலையில் நேரில் ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
  • அசிமானந்தாவிற்கு பிணை கிடைத்ததை அடுத்து மும்பையில் உள்ள அபினவ் பாரத் அமைப்பினர் இனிப்பு கொடுத்து கொண்டாடி னார்கள்.
  • அசிமானந்தா அய்தராபாத் மெக்காமஜீத் குண்டுவெடிப்பு 2007, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு 2007,  மலேகான் குண்டுவெடிப்பு 2006-_2008 தொடர்புடையவர்.  பாஜக ஆட்சிக் கட்டி லில் அமர்ந்ததில் இருந்து முக்கிய குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருகின் றனர், குஜராத்தில் என் கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரி வஞ்சாரா விடுவிக்கப்பட் டது மட்டுமல்லாமால் குஜராத் காவல்துறையில் முக்கிய பதவியும் கொடுக் கப்பட்டது,  வரும் நவம்பர் மாதம் அஜ்மீர் குண்டுவெடிப்பில் கைதான சாமியாரினி பிரக்யா சிங் பிணை மனு வும் விசாரனைக்கு வரு கிறது, அவரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக் கப்படுவார் என்று கூறப் படுகிறது.


  • Read more: http://viduthalai.in/headline/86719-2014-08-29-10-20-14.html#ixzz3Bqbs0Glh
பாஜக ஆட்சியில் தொடர்ந்து விடுதலையாகும் பயங்கர குற்றவாளிகள் பாஜக ஆட்சியில் தொடர்ந்து விடுதலையாகும் பயங்கர குற்றவாளிகள் Reviewed by நமதூர் செய்திகள் on 21:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.