இந்தியா இந்து நாடல்ல - காங்கிரஸ் பதிலடி!
புதுடெல்லி: இந்தியா இந்து நாடல்ல, பாரதம் என்றே அரசியல் சட்டம் கூறுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், "உலகம் முழுவதும் இந்திய மக்கள் இந்துக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். எனவே, இந்தியாவை இந்து நாடு என்று தான் கூறவேண்டும்." என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மோகன் பகவத்தின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா, ’ இந்தியாவின் அரசியல் சட்டம் இந்தியாவை பாரதம் என்று தான் கூறுகிறதே தவிர இந்துஸ்தான் என்று ஒரு போதும் கூறவில்லை. பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு மதங்களை உள்ளடக்கிய சமூகமாக விளங்கும் இந்தியா, ஹிந்துத்துவா தொடர்பான கோல்வால்கரின் தெளிவுரையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை" என்று கூறியுள்ளார்.
இந்தியா இந்து நாடல்ல - காங்கிரஸ் பதிலடி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
07:05:00
Rating:
No comments: