துருக்கி அதிபராக எர்துகான் பதவியேற்பு!
துருக்கியின் பிரதமராக 11 ஆண்டுகள் பதவி வகித்த ரஜப் தய்யிப் எர்துகான் துருக்கி அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
தலைநகரான அங்காராவில் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற பதவி பிரமாண நிகழ்ச்சியில் துருக்கியில் முதன் முதலாக நடந்த மக்கள் வாக்களித்த அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற எர்துகான் அதிபராக பதவியேற்றார். மூன்று முறை துருக்கியின் பிரதமராக பதவி வகித்த எர்துகான், அதிபர் பதவிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
பதவியேற்பு விழா நிகழ்ச்சியை எதிர்கட்சியினர் புறக்கணித்தனர். அமெரிக்கா, தனது தூதரக அதிகாரியை பிரதிநிதியாக அனுப்பிவைத்தது. ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் விழாவிற்கு வரவில்லை. தேர்தலில் 52 சதவீத வாக்குகளைப் பெற்று எர்துகான் அதிபரானார்.
துருக்கிக்கு புதிய முகத்தை அளிக்கும் பணி தொடரும் என்று நேற்று முன் தினம் எர்துகான் தெளிவுப்படுத்தியிருந்தார். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஹ்மத் தாவூத் ஓக்லுவின் தலைமையிலான அரசு பொம்மை அரசு அல்ல என்று எர்துகான் தெரிவித்திருந்தார். நேற்றுதான் எர்துகான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
துருக்கி அதிபராக எர்துகான் பதவியேற்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:02:00
Rating:
No comments: