உலக புத்தக தினம் .. ஏப்ரல் 23 ! – அஹ்மது யஹ்யா அய்யாஷ்
உலக வரலாற்றில் அறிவு ஜீவிகளின் ஆன்மாவாக திகழ்ந்தவைகள் புத்தகங்கள் .புரட்சியாளர்களின் வாழ்க்கை சரிதங்களில் அவர்கள் நேசித்த , லட்சிய கணலை எறியச் செய்த புத்தகங்களின் பங்கினை குறிப்பிடாமல் சென்றால் வரலாறு பிழையாகிவிடும் . புத்தகங்கள் உலக சாம்ராஜ்ஜியத்தை உலுக்கின , இன்னமும் உலுக்கிக் கொண்டே இருக்கின்றன . சர்வதேச புகழ்பெற்ற இலக்கியவாதியும் ,நாடக ஆசிரியருமான ஷேக்ஸ்பியரின் பிறந்த தினத்தை உலக புத்தக தினமாக கொண்டாடி வருகிறோம் . இந்திய தேசத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு தனது சுய சரிதையான டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் குறிப்பிட்டதை நினைவுபடுத்துவது இத்தருணத்தில் மிகப்பொருத்தமாக இருக்கும் . நேரு எழுதுகிறார் “ஐரோப்பா அறியாமை எனும் இருளில் மூழ்கி கிடந்தபோது அதற்கு அறிவொளி வீசச் செய்த பெருமை எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்கு உண்டு”. நேரு அப்படி எழுதியமைக்கான காரணமும் உண்டு. அப்பல்கலைக்கழக நூலகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன .
புத்தகம் பல்வேறு சமூகங்களிடையே அவரவர் விருப்பம் சார்ந்து ,விழுப்புணர்வு சார்ந்து அவரவர் ஆழ்மனதை தொட்டுச் சென்றன . உரிமை சார்ந்த போராட்ட பெருமழையின் சிறுதுளி வாசிப்பை தவிர வேறென்ன இருக்க முடியும் . இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் நொடிக்கு நொடி பல நாடுகளில் புரட்சிக்கு வித்திட்டதெனில் அவர்களிடையேயான ஆழமான வாசிப்பு தவிர்க்க முடியாத ஒன்று . கியூபா புரட்சியை எடுத்துக் கொண்டால் “சேகுவேரா” வின் உள்ளத்தை பிசைந்து “சே”வை புரட்சியை நோக்கி பயணிக்க வைத்த பெருமை புத்தகங்களுக்கு மட்டுமே உண்டு . அதனால்தான் என்னவோ “சே” தனது கொரில்லாத் தாக்குதலில் மரங்களின் கிடுக்குகளில் மறைந்திருந்தபோதுகூட வாசிப்பை தொடர்ந்தான் .
சமூக தளங்களில் பயணிக்கும் ஒவ்வொரு நபரும் புத்தகத்தை வாசிக்காமலோ ,நேசிக்காமலோ இருக்க வாய்ப்புகள் அரிதிலும் அரிது. சமூகத்தின் எதார்த்த இயங்கியலை துள்ளியமாக அறியக்கூடிய வாய்ப்பு புத்தகங்களிடம் உண்டு . ஆனால் இன்றோ புத்தகத்தின் வாசனையையும் , வாசிப்பின் காதலையும் மறந்த இளைய சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டிருப்பது வேதனை தரும் நிகழ்வு . உலகளாவிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் , கல்விக்கூடங்களில் மாணவ சமூகம் புத்தகப் புழுக்களாக வளர்க்கப்படுவதாலும் வாசிப்பில் மழுங்கிய சமூகம் உருவெடுப்பதற்கான மிக முக்கியக் காரணங்கள் . இளைய சமூகம் சமூக அவலங்கள் குறித்து சிந்திக்கக் கூடாதென செய்த மாபாதக செயலாகவே இதனை பார்க்கத் தோன்றுகிறது .
இன்றைய இளைய சமூகம் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெதிராக போராட வேண்டிய தேவையும் சமூக மாற்றத்திற்கான களப்பணியாற்ற வேண்டிய கட்டாயமும் அதிகம் உள்ளது .
“புத்தகங்கள் இல்லாமல் புரட்சிகள் சாத்தியமில்லை ..!
புத்கப்புழுக்களால் புரட்சி நிச்சயமில்லை ..!!” என்பதை இளைய சமூகம் உணர வேண்டும் .
புத்கப்புழுக்களால் புரட்சி நிச்சயமில்லை ..!!” என்பதை இளைய சமூகம் உணர வேண்டும் .
புத்தகம் குறித்து புரட்சியாளர் நெல்சன் மண்டேலா கூறிய வாசகங்களை உலக புத்தக தினத்தில் நினைவில் கொள்வோம் . .
“”சிறையில் வேறு எந்த சுதந்திரமும் எனக்கு வேண்டாம் . புத்தக வாசிப்பை மட்டும் அனுமதியுங்கள் ..””
“”சிறையில் வேறு எந்த சுதந்திரமும் எனக்கு வேண்டாம் . புத்தக வாசிப்பை மட்டும் அனுமதியுங்கள் ..””
வாசிப்பை நேசிப்போம் ..!!!
வாசிக்கத் தூண்டுவோம் …!!!!
வாசிக்கத் தூண்டுவோம் …!!!!
- அஹ்மது யஹ்யா அய்யாஷ்
(தமிழ்ச் செம்மல் )
- See more at: http://www.thoothuonline.com/archives/72611#sthash.2CfB8CDj.dpuf
உலக புத்தக தினம் .. ஏப்ரல் 23 ! – அஹ்மது யஹ்யா அய்யாஷ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:23:00
Rating:
No comments: