கனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒருபகுதியாக 3 நாள் பயணமாக கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இறுதி நாளான இன்று வான்குவரில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்கு சென்றார். முன்னதாக டொரண்டோவில் இருந்து வான்குவருக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் உடன் சென்றார்.
அவருடைய குருத்வாரா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா வாழ் சீக்கிய மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

modi-visit
500-க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் 2002 குஜராத் முஸ்லிம் படுகொலைகளின் சூத்திரதாரியான நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழையக்கூடாது எனவும் இந்தியாவுடன் கனடா தீவிரவாத எதிர்ப்பு உடன்படிக்கை செய்யக்கூடாது எனவும் கோஷங்கள் எழுப்பட்டது.
அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் “ நரேந்திர மோடி கோ பேக்” “2000 முஸ்லிம்களை படுகொலை செய்தவர்” என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மக்கள் உயர்த்திப்பிடித்திருந்தனர்.
முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு கடும் காவல் துறை பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
மேலும் நரேந்திர மோடி அங்கு 48 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவிற்க்கு வரும் முதல் இந்திய பிரதமர் நான்தான் என்று பேசியிருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது , மன்மோகன் சிங் பிரதமாராக இருந்து 48 வருடங்களா ஆகிவிட்டன, ஏன் மோடி இப்படி பொய் சொல்கிறார் என்று காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடித்துள்ளனர்.
- See more at: http://www.thoothuonline.com/archives/72394#sthash.ZmjYqhM6.dpuf
கனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு கனடாவில் நரேந்திர மோடி கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு Reviewed by நமதூர் செய்திகள் on 21:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.