அரபு மொழியில் திருக்குறள்: சாதனை படைத்த கவிஞர்!
திருவள்ளுவரால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய கலை மற்றும் கலாச்சார மையம் சார்பில் தம்மாமில் நடைபெற்ற கவிஞர்கள் மாநாட்டில் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் வெளியிடப்பட்டது. இந்த வியத்தகு சாதனையை நிகழ்த்தியிருப்பது மதரசாவில் கல்வி பயின்ற ஜாஹிர் ஹுசைன் பாகவி. தமிழகத்தின் கடைகோடி பகுதியிலிருக்கும் குமரி மாவட்டத்திலுள்ள தக்கலையை சார்ந்த இவர், சென்னை பல்கலைக் கழகத்தின் அரபுத்துறையின் தலைவராக பணியாற்றுகிறார்.
இவ்வெளியீடு குறித்து தெரிவித்த கவிஞர் ஜாஹிர் ஹுசைன் பாகவி, "திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது. நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்" என்று கூறியுள்ளார்.
முனைவர் கவிஞர் ஜாஹிர் ஹுசைனுக்கு நமதூர் செய்திகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் வாழ்த்துக்களை முகநூல் வழியாக தெரிவிக்க: ஜாஹிர் ஹுசைன்
அரபு மொழியில் திருக்குறள்: சாதனை படைத்த கவிஞர்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:13:00
Rating:
No comments: