இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த குந்தர் கிராஸ்!
இஸ்ரேலை எதிர்ப்பதில் குந்தர் கிராஸ் உறுதியாக இருந்தார். யூத அராஜக தேசத்தின் கொடூரமான வன்முறைகளை அவர் கடுமையான பாஷையில் விமர்சித்தார். 2012-ஆம் ஆண்டு வெளியான வாட் மஸ்ட் பி ஸைட் என்ற கவிதை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வுடன் பேசி வந்த இஸ்ரேலுக்கு கிராஸின் கவிதை பலத்த அடியை கொடுத்தது.இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைய குந்தர் கிராஸுக்கு தடை விதிக்கப்பட்டது.
‘ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி அந்நாட்டை தாக்குவதற்கான நியாயத்தை இஸ்ரேல் கண்டுபிடிக்கும்’ என்று குந்தர் கிராஸ் வெளிப்படையாக தெரிவித்தார். கவிதையின் பெயரால் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவே குந்தர் கிராஸுக்கு எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால், ‘நான் யூத சமூகத்தை ஒட்டுமொத்தமாக விமர்சிக்கவில்லை. இஸ்ரேல் அரசின் மனிதகுலத்திற்கு எதிரான குணத்தையே விமர்சிக்கிறேன்’ என்று கிராஸ் விளக்கமளித்தார்.
கிராஸ், வெறுமொரு எழுத்தாளர் மட்டுமல்ல.சமூக விமர்சகராகவும், இலக்கியம் மற்றும் வாழ்க்கையிலும் இடதுசாரி கொள்கைகளின் வலுவான பிரதிநிதியாகவும் திகழ்ந்தவர்.
வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட முகத்தை தனது முதல் நாவலான த டின் ட்ரம்மில் கிராஸ் விவரித்தார்.இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தய ஜெர்மனியின் “தார்மீக மனசாட்சி” என்று கருதப்பட்ட அவர் 2006ம் ஆண்டில், தான் தனது 17வது வயதில் நாஜிக்களின் ராணுவப்பிரிவான, ‘வாஃபன் எஸ்.எஸ்”சில் தானாக சுயவிருப்பத்தின் அடிப்படையில் சேர்ந்ததாக அறிவித்ததை அடுத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.ஆனால் அவர் ஏதும் போர்க்குற்றங்கள் இழைத்திருந்ததாகக் குறிப்பிடவில்லை.ஜெர்மனி ஒன்றிணைவதற்கு கிராஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.ஐக்கிய ஜெர்மனி மீண்டும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.ஆனால், அதற்கு பலன் கிடைக்கவில்லை.ஜெர்மனி ஒன்றிணைந்தது.தனது போர் கால அனுபவங்களை கிராஸ் தி நியூயார்க்கரில் வெளியிட்டார்.
50களில்தான் கிராஸ் எழுத்துலகில் நுழைந்தார்.அவரது எழுத்துக்கள் இடதுசாரி அரசியல் சிந்தனை அடிப்படையிலானது.அவரது தி டின் ட்ரம், கேட் அண்ட் மவுஸ், டாக் இயேர்ஸ் ஆகிய நாவல்களில் நாசிசத்தின் வளர்ச்சி மற்றும் போர் அனுபவங்களை கிராஸ், வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
What must be said என்ற கவிதையில் இடம் பெற்ற கீழ்க்கண்ட வரிகள் முக்கியமானவை:
Why I am silent, silent for too much time
how much is clear and we made it
in war games, where, as survivors,
we are just the foot notes…
how much is clear and we made it
in war games, where, as survivors,
we are just the foot notes…
போர்களுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னர் மனிதர்கள்வெறுமொரு அடிக்குறிப்புகள் மட்டுமே என்பதை இந்த வரிகள் மூலம்அவர் உலகத்திற்கு நினைவூட்டினார்.மனிதர்கள் உயிர் வாழ்ந்த சிறியஇடைவேளைகளின் அடிக்குறிப்புகள் மட்டுமே இந்த இலக்கியங்கள்என்பதை அவர் இதன் மூலம் தெரிவித்தார்.
அ.செய்யது அலீ.
- See more at: http://www.thoothuonline.com/archives/72320#sthash.sRosZFIF.dpuf
இஸ்ரேலின் தூக்கத்தைக் கெடுத்த குந்தர் கிராஸ்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:07:00
Rating:
No comments: