ஊடகத்தை உயிர்ப்பிப்போம் – நெல்லை ஆதில்

இன்று சாதாரன மக்களுக்கு ஊடகம் என்பது ஒரு எட்டாக் கனியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக விளிம்புநிலை சமூக மக்கள் ஊடகம் ஒரு மிகப்பெரிய பிம்பம் என கற்பனை செய்து வைத்துள்ளனர். ஊடகத்தில் நமது பங்களிப்பு ஏன் இல்லை என்று நம்மை நாமே மீளாய்வு செய்ய கடமைப்பட்டுள்ளோம்.ஊடகத்தில் நம்முடைய பங்களிப்பு இல்லை என கூக்குரலிடுவதை விட அதை எவ்வாறு ஈடுகட்டுவது என சிந்திப்பதுதான் சாலச்சிறந்தது.

முஸ்லிம் சமூகம் சந்திக்க்கூடிய பிரச்சனைகள்,இச்சமூகத்தின் இடற்பாடுகள்,முன்னேற்றங்கள் என அனைத்தையும் பொது தளத்தில் வெளியிட ஊடகங்கள் மறுக்கின்றன இதற்கான காரணத்தை நாம் பார்த்தால் வழக்கம்போல ஃபாசிஸவாதிகள் என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விடுகிறோம். ஆனால் இதற்கு நாமும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு காரணமாகத்தான் இருந்துவருகிறோம்.
ஆம் இன்று முஸ்லிம்கள் ஊடகத்துறையில் அதிகம் ஒடுக்கப்பட்டுவிட்டார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தும் மக்களுக்கு ஒதுங்கிவிட்டதால் தான் ஒடுக்கப்பட்டோம் என்பது நினைவுக்கு அல்ல கனவுக்கு கூட வருவதில்லை.
தமிழகத்தில் இருக்கக்கூடிய முஸ்லிம் ஆளுமைகள் இன்று மக்கள் பிரச்சனைகளைப்பற்றி தனது பேச்சிலோ,எழுத்திலோ காட்டுவது இல்லை. இங்கு மக்கள் பிரச்சனை என்பது சாதி,மதம்,இனம் கடந்த மக்களின் பிரச்சனைகள், இஸ்லாம் போதிப்பதும் அதைத்தான்,மனித இனத்திற்கு தீங்கு விளைவிப்பதை எதிர்த்து போராட கடமைப்படுத்தியுள்ளது மார்க்கம்.
உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகத்தான் அண்ணல் நபி( ஸல்) அவர்கள் திகழ்ந்தார்களே தவிர முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல. ஆனால் மார்க்கத்தை கடைபிடிக்கிறோம் என்று மார்தட்டிக்கொண்ட மக்கள் இந்த விஷயத்தில் மண்ணைக்கவ்வியதால் தான் பொது சமூக நீரோட்டத்தில் நாம் கலக்காததற்கு மிக முக்கிய காரணம்.
அணு உலை பற்றியோ,மீத்தேன் திட்டம் பற்றியோ,நியூட்ரினோ பற்றியோ முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல அவர்களின் ஆளுமைகளுக்கும் குறிப்பாக உலமாக்களுக்கும் அதனைப்பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது. இதைப்போன்று ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற பிரச்சனைகளை கையில் எடுத்தால் தான் பொது நீரோட்டத்தில் நமக்கு ஒரு சிறு இடமாவது அளிக்கப்படும்.
அடுத்தபடியாக விவாத அரங்குகளில் சமூக ஆர்வலர்,பொருளாதார வள்ளுநர்,கல்வியியலாளர் என்ற இடத்தில் இது வரை ஊடக வரலாற்றில் முஸ்லிம்கள் பங்காற்றியது இல்லை. சமூகம் குறித்த,பொருளாதாரம் குறித்த தொலைதூரப்பார்வை முஸ்லிம்களிடத்தில் இல்லை. அதனால் தான் அந்த இடமும் காவிகளை நோக்கி செல்கிறது.
விவாதங்களை நடத்தும் அர்னாப் கௌசாமி போன்றவர்களை பார்த்து இச்சமூகம் மலைத்து நிற்கிதே தவிர தங்களிடமிருந்து ஒரு அர்னாபையோ அல்லது பாண்டேவையோ உருவாக்கவேண்டும் அல்லது நாம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் இல்லை.நம் எண்ணத்தைக்கொண்டுத்தான் நம் செயல்கள் நம்மிடம் எண்ணமே இல்லையென்றால் செயல் எவ்வாறு இருக்கும்.
இதற்கான தீர்வை நாம் எவ்வாறு பெறுவது என்ற கேள்வி பலருடைய உள்ளத்திலும் விம்மி எழுகிறது.அதற்கான விடையாக தனித்தொலைக்காட்சி என்பது மிகவும் வேடிக்கையானது ஏற்கனவே பொது நீரோட்டத்தில் கலக்காமல் பிரிந்து ஓரங்கட்டப்பட்ட சமுதாயத்தை மீண்டும் பிரித்து ஓரங்கட்டக்கூடிய வழிமுறைத்தான் இது. அதற்கான அவசியம் இருக்கின்றது என்றாலும் நேரம் இதுவல்ல என்பது பல ஊடகவியலாளர்களின் கருத்து.
பின்னர் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற வினா நம்முள் எழுகிறது. முதலில் வாசிக்க வேண்டும் இன்று வாசிப்பு என்பது மாத்திரைகளைப்போல கசப்பாக இருக்கிறது. அது கசப்பாக இருந்தாலும் இந்த நோய்க்கு குணமளிப்பது வாசிப்பு. நாளுக்கு நாள் நடைபெறக்கூடிய அன்றாட நிகழ்வுகளை நம் விரல் நுணியில் வைத்திருக்க வேண்டும். கேள்விக்கு பதிலளிக்கவும்,கேள்விகளை தொடுக்கவும் நம்மைத்தயார் படுத்தி கொள்ள வேண்டும். இதையெல்லாம் பரிவாரங்கள் செய்ததால்தான் அவர்கள் இன்று சமூக ஆர்வரலாக,கல்வியாளராக அந்த இருக்கையில் அமர்த்தப்படுகிறார்கள்.
இன்னும் முஸ்லிம் ஆளுமைகள் தங்கள் சிந்தனைகளை குறுகிய வட்டத்தினுள் சுருக்காமல் பரந்து விரிக்க வேண்டும் அதில் தான் இச்சமூகத்தின் பிரதிநிதித்துவம் மறைந்திருக்கிறது.வாசிப்போம் வளம்பெறுவோம்.
- நெல்லை ஆதில்
- See more at: http://www.thoothuonline.com/archives/71928#sthash.JOX8z2Nx.dpuf
ஊடகத்தை உயிர்ப்பிப்போம் – நெல்லை ஆதில் ஊடகத்தை உயிர்ப்பிப்போம் – நெல்லை ஆதில் Reviewed by நமதூர் செய்திகள் on 05:51:00 Rating: 5

No comments:

Powered by Blogger.