வி.களத்தூர் ஜமாத்திற்கு ஒரு எளியவனின் குரல்!

நமதூர் ஜாமியா பள்ளிவாசலில் ஒரு பகுதியில் ஏசி அமைக்கப்பட்டு பல நாட்களுக்கு பிறகு இந்த மாதத்திலிருந்து  உபயோகத்தில் வந்துள்ளது. அதற்குள் மீதியிருக்கும் பகுதியிலும் மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து இன்னும் சில ஏசிக்களை அமைக்க யாராவது ஸ்பான்சர் செய்தால் நன்றாக இருக்கும் என்ற அடிப்படையில் நமது ஜமாஅத் தலைவர் ஜும்ஆ வில் அறிவிப்பு செய்தார்கள்.

ஆஹா நமது பள்ளியில் இன்னும் சில ஏசிக்கள் போடப்போகிறார்கள் என்று பலரும் பெருமிதம் அடைகிறார்கள். ஆனால் இது இப்போதைக்கு தேவை இல்லாதது என்று யாரும் சொன்னதாக தெரியவில்லை. நமது பள்ளிக்கு ஏசி தேவைதானா? என்று கேட்டால், அதிலென்ன தப்பு நம்ம ஜமாஅத் பணத்திலா போடுறாங்க ஸ்பான்சர் மூலமாக தான போடுறாங்க என்று சிலர் நம்மையே திருப்பி கேட்கிறார்கள்.

ஆனால் இதற்கு ஆகும் கரண்ட் பில்  செலவு பற்றி யாரும் யோசிப்பதாக தெரியவில்லை. ஏற்கனவே நமது பள்ளிக்கு பெரிய வருமானம் இல்லை. சில கட்டிடங்களின் மூலமாக வரும் வாடகையை வைத்து தான் பொழப்பு ஓடுகிறது. அதில் வரவிற்கு ஏதுவான செலவு செய்து ஏதோ 1000 மோ, 2000 மோ தான் மிச்சம் படுத்தினார்கள். இப்போது அதுவும் இல்லை என்ற நிலை வந்துவிடும்போல.

பள்ளிக்கு ஏசி வசதி தேவை இல்லை என்று நான் சொல்ல  வரவில்லை. அடிப்படை தேவைகள் என்று பல வேலைகள் இருக்கும் பொது ஏசி தேவைதானா என்றுதான் நான் கேட்கிறேன். பள்ளிக்கு தேவையான எத்தனையோ பணிகள் நடைபெற வேண்டியுள்ளது. குறிப்பாக பள்ளியில் அடிக்கப்பட்டுள்ள சுண்ணாம்பு பெயர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பள்ளி பொலிவிழந்து வருகிறது. அதை சரிசெய்வதில் இந்த நல்ல மனது கொண்ட ஸ்பான்சர்களை ஏன் பயன்படுத்த கூடாது?

ஒரு மனிதனுக்கு உள்ளே பல நோய்கள் இருக்கும்போது, அதை அவன் சரிசெய்யாமல் வெளியே தான் அழகாக தெரிவதற்காக அலங்காரம் செய்வது போல.  பள்ளிக் கென்று தேவைகள் பல இருக்கும்போது அதைதான் முதலில் சரிசெய்ய வேண்டும்.
இப்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஏசி, பிரிட்ஜ் என்று வைத்துகொள்வதிலா மகிழ்ச்சி  உள்ளது. பள்ளியில் தொழுகைக்கு மக்கள் நிரம்பி வந்தால்தான் மகிழ்ச்சியுள்ளது. காசு உள்ளது என்பதற்காக பள்ளியை 2 மாடி கொண்ட பெரிய கட்டிடமாக கட்டிவிட்டோம். ஆனால் தொழுக வருவதோ 2 வரிசையை தாண்டவில்லை.
ஆகவே நமது பள்ளியில் ஏசி வைக்க வேண்டும். கண்டிப்பாக வைக்க வேண்டும். ஆனால் அதற்கு முன் பள்ளிக்கு அடிப்படை அவசியமான தேவைகள் என்ன? முதலில் செய்ய வேண்டிய பணிகள் என்ன? என்று திட்டமிட்டு செயலாற்றுவதுதானே சிறந்தது.

அப்படி திட்டமிட்டு மக்களின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்துவார்களா நம்ம ஜமாத்தினர். இந்த எளியவனின் கருத்துக்களுக்கு ஜமாஅத் செவி சாய்க்காது என்று தெரியும்.

பிறகு ஏன் இப்படி புலம்புற என்று கேட்கிறீர்களா?
ஏதோ சொல்லனும்னு தோனுச்சி. அதான் சொல்லிபுட்டேன்.

- வி.களத்தூர் பாரூக்
வி.களத்தூர் ஜமாத்திற்கு ஒரு எளியவனின் குரல்! வி.களத்தூர் ஜமாத்திற்கு ஒரு எளியவனின் குரல்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:21:00 Rating: 5

No comments:

Powered by Blogger.