காஷ்மீரில் பேரணியாக செல்ல முயன்ற யாசீன் மாலிக் மற்றும் சுவாமி அக்னிவேஷ் கைது
காஷ்மீர்: JKLF நிறுவனர் யாசின் மாலிம் மற்றும் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் ஆகியோர் மத்திய காஷ்மீரில் உள்ள புல்ஹாம் மாவட்டத்திற்குள் பேரணியாக செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்,
முன்னதாக அங்கு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் காவல்துறையால் சுடப்பட்டு இறந்தார்.
கடந்த வாரம் ரானுவத்தால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் மறைவுக்கு நீதி கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசார் கண்மூடித்தனமாக சுட்டதில் சுஹைல் அஹமத் சோஃபி என்ற மாணவர் கொல்லப்பட்டார்.
தற்பொழுது யாசீன் மாலிக் நடத்தி வரும் பண்டிட்டுகளுக்கு தனி காலனி நிலங்கள் வழங்கும் திட்டத்திற்கு எதிரான 30 மணி நேர உன்னாவிரதத்தில் சுவாமி அக்னிவேஷ் தன்னை இனைத்துக்கொண்டார்.
காஷ்மீர் மக்களுக்கிடையே ஒரு போதும் பிரிவினையை அனுமதிக்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த யாசின் மாலிக் “மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்தும் அரசின் சூழ்ச்சிகளில் பண்டிட்கள் விழுந்து விடக்கூடாது என்றும் அன்பும் சகோதரத்துவமுமே அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
சுவாமி அக்னிவேஷ் கூறுகையில் பண்டிட்கள் இத்தகைய பிரிவினைவாத திட்டங்களை புறக்கனித்து அரசு வழங்கும் காலனிகளை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/72427#sthash.5LRP82Y9.dpuf
காஷ்மீரில் பேரணியாக செல்ல முயன்ற யாசீன் மாலிக் மற்றும் சுவாமி அக்னிவேஷ் கைது
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:16:00
Rating:
No comments: