யார் இந்தப் பாண்டே – அவர் பின்னணியில் உள்ளவர்கள் யார்?

பேரா. அ.மார்க்ஸ் 
தமிழர்களின் பெருமை யாக இன்று தமிழ்த் தேசி யர்களால் தெண்டனிட்டுக் கொண்டாடப்படும் ராஜராஜ சோழன், அவன் மகன் ராஜேந்திர சோழன்… இவன்கள் எல்லோரது காலத்திலும் பீஹாரிலிருந்து பார்ப்பனர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
கோவில் அர்ச்சகர் களாக மட்டுமல்ல, அரச குருக்களாகவும், கோட் டைக் காவலர்களாகவும் (துர்க்கா தண்டநாயகர்கள்) அவர்கள் பெரும் செல்வாக்குடன் வாழ்ந்து அதிகாரம் செலுத்தியுள்ளனர்.
பீஹாரில் எந்த ஊரிலிருந்து கொண்டுவரப்பட்ட வர்கள் என்கிற விவரங்கள் எல்லாம் சாசனங்களில் உள்ளன. நீலகண்ட சாஸ்திரியார், சதாசிவப் பண்டாரத்தார் எல்லோரும் இதைத் தம் சோழர் வரலாற்றில் குறிப்பிடுகின்றனர். நண்பரும் வாழும் தமிழறிஞருமான பொ.வேல்சாமியும் தனது ‘கோவில் நிலம் சாதி’ நூலில் இதைக் குறிப்பிடுவார்.
எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம். இந்த தந்தி டி.வி ரங்கராஜ் பாண்டே குறித்து. அது என்ன பாண்டே, தமிழ்ப் பெயராகத் தெரியவில்லையே என. சற்று முன் விசாரித்த போதுதான் இந்த நபரின் பூர்வீகம் தெரிந்தது. பீஹார் பார்ப்பனர்தானாம். இவரது தந்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்திற்கு அர்ச்சகராக வந்தவராம். இவர் இங்கு பிறந்து வளர்ந்தவராம்.
இன்னும் கூடவா அர்ச்சகர்கள் பீஹாரிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும்? என்ன பின்னணி எனத் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ஆசிரியர் வீரமணியிடம் பாண்டே அடி வாங்கியது குறித்து முகநூல் அல்லோகலப் படுகிறது. மகிழ்ச்சி. எனக்குப் பார்க்க இயலவில்லை.
எல்லோரும் ஆசிரியரைப் பாராட்டுகின்றனர். எனக்கு வியப்பில்லை. இது போன்ற கேள்வி களுக்குப் பதில் அளிப்பதையே ஒரு வாழ்வாகக் கொண்டவர்கள் அல்லவா பெரியாரியர்கள்… எத்தனை கேள்விகள்… எத்தனை அவதூறுகள்… எத்தனை கல்லடிகள். தந்தை பெரியார் மீதே செருப்பை வீசவில்லையா இழி பிறவிகள். அவர் எதிர் கொள்ளாத கேள்விகளா?
ஒரு பதிலை நான் மிகவும் ரசித்தேன்.நண்பர் பிரபா அழகரின் பக்கத்திலிருந்தது அது.
“நீங்கள் ஏன் எப்போதும் இந்து மதத்தையே விமர்சிக்கிறீர்கள்? கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களை விமர்சிப்பதில்லையே…”
இந்தக் கேள்விகள் வழக்கமாகப் பெரியாரியர்கள் எதிர் கொள்வதுதான். என்னிடமும் பல முறை இது கேட்கப்பட்டதுண்டு. இல்லை, அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இந்த மதங்களையும் கூட விமர்சிக்கத் தேவை வரும்போது தவறுவதில்லை.
இவை இன்று இங்கு சிறுபான்மை மதங்களாகவும், பெரும்பான்மை வன்முறைக்கு ஆளாகக் கூடியதாகவும் இருப்பதால் எங்கள் முன்னுரிமை அதற்கு இருப்பதில்லை என்கிற ரீதியில் என் பதில் இருக்கும். பல நேரங்களில் அது எடுபடுவதில்லை.
ஆசிரியர் அட்டகாசமாக இதற்குப் பதில் சொல்லியுள்ளார். யார் எங்களை சூத்திரர் என்றும், வேசி மக்கள் என்றும் தீண்டத் தகாதவர் என்றும் இழிவு செய்கிறார்களோ அவர்களை விமர்சிப்பது தான் என் முன்னுரிமை. கிறிஸ்தவமோ. இஸ்லாமோ எங்களை இப்படி இழிவு செய்வதில்லை.
87 சதம் மக்கள் தொகை உள்ள ஒரு மதத்தின் பிரதிநிதியாக நிறுத்திக் கொண்டு அவர்கள் இதை எல்லாம் செய்கிறார்கள். ஆனால் இதர மதத்தினர் இப்படி யெல்லாம் எங்களை இழிவு செய்வதில்லை என்பதோடு சிறுபான்மையினரும் கூட என்கிற ரீதியில் ஆசிரியரின் பதில் நச்.. நச்……
நண்பர்களே. பாண்டே முகம் வெளிறி இருக் கலாம். ஆசிரியர் அந்த நபரின் மூக்கை உடைத் திருக்கலாம். நாமும் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். தமிழகத்தில், அதுவும் “நாம் தமிழர்”
ஆதித்தனாரின் ஊடகம் ஒன்றில் ஒரு பீஹார்ப் பார்ப்பனன் ஆசிரியரிடம் திராவிடர் இயக்கம் குறித்தும், அதன் கொள்கைகள் குறித்தும் எடுத்தெறிந்து பேசவும், இத்தகைய அபத்தக் கேள்விகளை நேர்காணல் என்கிற பெயரில் ஆசிரியரை நோக்கிக் கேட்கவும் நேர்கிற ஒரு நிலை இன்று ஏற்பட்டுள்ளது என்பது தான் அது.
இன்றும் இந்த நிகழ்விலும், ஆசிரியர் அறிவித் துள்ள தாலி அகற்றும் போராட்டம் குறித்தும் யாரெல்லாம் அதை அவதூறு செய்கிறார்கள், யாரெல்லாம் அதை எதிர்க்கின்றனர் என்பதை ஒரு கணம் கவனிக்கத் தவறாதீர்கள்.
பெரியார் குறித்த அவதூறுகளைக் கடந்த 35 ஆண்டுகளாக மேலெடுத்த சகல தரப்பினருக்கும் பார்ப்பனீயத்திற்கும் உள்ள மிக நெருக்கமான உறவையும் மறந்துவிடாதீர்கள்.
அக்கிரகாரச் செருக்கை அய்யாவின் அறிவாயுதத்தால் முறியடிப்போம்
தமிழ் கூறும் நல்லுலகில் மனு தர்ம அடிப் படையில் பெண்களை அடிமைகளாக, பேரிளம் பெண்களை போகப் பொருளாக மொத்தத்தில் பிள்ளை பெறும் இயந்திரமாக ஆக்கி அடிமைப் படுத்திய காலத்தில் மனித உணர்வுகளின் மாட்சிமை தாங்கிய குறளாக அன்று தந்தை பெரியார், பெண் ஏன் அடிமையானாள்? என்ற கேள்வியை எழுப் பினார். அக்ரகாரத்துப் பெண்களுக்கும் அய்யாவின் கேள்வி சரியாகப் பட்டது.
பொட்டு வைத்து, பூ வைத்து பொட்டுக் கட்டிய தேவதாசி முறையினை ஆவேசமாக எதிர்த்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் அம்மையார் அவர்களின் ஆவேசக் குரலின் உள்ளே கூட அய்யாவின் கொள்கை ஒலித்தது. அய்யா என்ற அந்த உயிர் எழுத்து, ஆண்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், ஆண்டவனிடத்திலிருந்தும், அக்ரகாரத்திலிருந்தும் பெண்களின் உரிமையைப் பாதுகாத்தது.
தாலி என்பது பெண்களுக்கு எந்த வகையில் வேலியாக உள்ளது? எங்களைக் காப்பதில் தாலி வேலியாக உள்ளதா? பாலியல் வன்முறை செய்யும் போது பெண்களின் கற்புக்கு தாலி வேலியாக இருந்து இருக்கிறதா? கணவனே மனைவியைக் கொலை செய்யும் போது தாலி பாதுகாத்திருக்கிறதா? அரசு அலுவலகத்திலே, காவல் நிலையத்திலே, அங்காடிகளிலே, சிற்றின்ப சீறல்கள் எழுந்த போது தாலி வேலியாக இருந்திருக்கின்றதா?
ஒரு காலத்தில் பெண்கள் கல்வி அறிவு இல்லாத, பகுத்தறிவு சிந்தனை இல்லாத போது, பெண் திருமணம் ஆனாள் என்ற அடையாளமாக தாலி இருந்தது (அடிமையாக்க).
இன்றோ, ஆகாய விமானத்தில் இருந்து அறிவுசார் தொழில்நுட்பம் வரையிலும் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில், ஆட்சி அதிகாரத்தில் பெண்கள் அளப்பரிய சாதனைகளைச் செய்து வருகிறார்கள்.
தாலியை விரும்பினால் போட்டுக் கொள். விரும்பாவிட்டால் அகற்றி விடு. அறிவாய்ந்து வாழ்வது, அடிமையாக வாழ்வதும் அவரவர் விருப்பம்.
தாலி அகற்றும் நிகழ்ச்சி என்பது அறிவாய்ந்த பெண்களின் விருப்பத்தின்பாற்பட்டது. இதுவே அய்யா வீரமணி அவர்களின் அறைகூவல்.
இதையறியா மழைக்காலத்து மண்டூகங்களாய் தமிழ் நாட்டு அரசியலில் பால பாடம் படிக்கும் பக்குவமற்ற சிலர் (சரத்குமார்) சந்து முனையில் சிந்து பாடுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை அவர்களே திரும்பிப் பார்க்கட்டும்.
தாலிக்கு அவர்கள் கொடுத்த மரியாதை அவர்களுக்கே தெரியாதே? அய்யாவின் கொள்கைக்கு தமிழ்நாட்டின் பெண்கள் துணையாக நிற்போம்!
அய்யாவைக் கண்டிக்கும் அக்ரகாரச் செருக்கை அய்யா பெரியாரின் அறிவாயுதம் கொண்டு முறியடிப்போம்!
நேர்மைக் குறைவல்ல – அயோக்கியத்தனம்
பெரியார் வினாக்களுக்கோ, விமரிசனத்திற்கோ அப்பாற்பட்டவர் அல்லர். பெரியார் கொள்கைகள் குறித்த தொலைக்காட்சி விவாதத்தில் பெரியாரின் கருத்து குறித்த கேள்விகளைக் கேட்பதோ, அதற்கான ஆதாரங்களை அளிப்பதோ இயல்பானதே!
ஆனால் பேட்டி காணப்படுபவரிடம் அவர் கூறும் கருத்துகளுக்கு எதிரான ஆதாரங்களை கொடுத்து விளக்கம் கேட்பதுதான் ஏற்கத்தகுந்த நேர்மையான ஊடக அறமாக இருக்கும். அதற்கு பதிலாக கருத்துரைப்பவர் இல்லாத நிலையில் அரைகுறை ஆவணங்களை ஆதாரம் என்ற பெயரில் திணிப்பது ஊடக அறமல்ல. அதன் பெயர் நேர்மைக்குறைவுமல்ல. அயோக்கியத்தனம்..!
பத்திரிகை சுதந்திர ஆதரவாளர்கள், கருத்துரி மைக் காவலர்கள் உட்பட எந்த தரப்பினரும் இந்த நேர்மையற்ற செயல் குறித்து சாதிக்கும் மவுனத்தை நான் “கள்ள மவுனம்” என்று சொல்லலாமா?
ஊடக நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை களுக்கு பொங்கி எழுந்து கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர் அமைப்புகள் இந்த கருத்துத் திணிப்பு குறித்தும் எதிர்வினை ஆற்றுவார்கள் என்று நம்புகிறேன்…!
- சுந்தரராசன், வழக்குரைஞர்
Source: விடுதலை
யார் இந்தப் பாண்டே – அவர் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார் இந்தப் பாண்டே – அவர் பின்னணியில் உள்ளவர்கள் யார்? Reviewed by நமதூர் செய்திகள் on 01:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.