நாட்டில் உள்ள எந்த ஒரு கணினியையும் உளவு பார்க்க 10 அரசு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி
நாட்டில் உள்ள எந்த ஒரு கணினியையும் அதில் உள்ள தகவல்களையும் கண்காணிக்க/உளவு பார்க்க 10 அரசு நிறுவனங்களுக்கு உள்துறை விவகாரங்களுக்கான அமைச்சகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, உளவுத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., என்ஐஏ, ரா, Directorate of Signal Intelligence(ஜம்மு கஷ்மீர்) மற்றும் டில்லி காவல்துறை ஆணையர் ஆகியோர் நாட்டில் உள்ள அனைத்து கணினி/மொபைல் மற்றும் அனைத்து கணினி/மொபைல்களில் இருந்து உருவாக்கும், வழியாகச் செல்லும், கணினி/மொபைல்களுக்கு வரும் மற்றும் கணினி/மொபைல்களில் பதிவு செய்து வைக்கப்படும் தகவல்களை வழிமறித்து உளவு பார்க்க, கண்காணிக்க, தகவல்களை decrypt செய்ய அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படியில் நாட்டின் குடிமக்கள் மற்றும் தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் (Service Providers) மேற்கண்ட அரசு நிறுவனங்களுக்கு இதற்கென தேவையான வசதிகளையும் தொழிநுட்ப உதவிகளையும் வழங்க வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு ஏழாண்டு காலம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த உத்தரவை தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 69(1) இன் கீழ் உள்துறை விவாரக அமைச்சகம் வழங்கியுள்ளது. அரசின் இந்த முடிவு, இந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் தேசத்தின் பாதுகாப்பிற்காகவும், பிற நட்பு நாடுகளின் நட்புறவை பாதுகாக்கவும், பொது அமைதியை பாதுகாக்கவும், மற்றும் மேற்கூறியவை சார்ந்த குற்றங்களை தடுக்கவும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு மூலம் இந்திய குடிமக்கள் எவரது தொலைபேசியையும் ஒட்டுக் கேட்க முடியும், இந்திய குடிமக்கள் எவரை குறித்தும் தகவல் சேகரிக்க முடியும். தனியுரிமை ஒருவரின் அடைப்படை உரிமை என்ற உச்ச நீதிமன்ற தீர்பிற்கு பின்னர் இந்திய அரசின் இந்த உத்தரவு வெளியாகி இருப்பதும் சமீபத்தில் இஸ்ரேலுடன் ஆதார் தகவல்கள் மற்றும் கணினி பாதுகாப்பு தொடர்பாக நான்கு ஒப்பந்தத்தை பாஜக அரசு கையெழுத்து இட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள எந்த ஒரு கணினியையும் உளவு பார்க்க 10 அரசு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:35:00
Rating:
No comments: