திருச்சி: சுற்றுச்சூழலுக்கான சர்வதேச கருத்தரங்கு!
தொழில் துறையும், நிறுவனங்களும் இன்னும் கூடுதலாக இணைய வேண்டிய தேவை இருப்பதாக ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் ஜிடி.யாதவ் கூறியுள்ளார்.
நிலையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கான முன்னேற்றங்களும், சவால்களும் என்ற தலைப்பில் திருச்சி தொழில்நுட்ப நிறுவனத்தில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கு டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கருத்தரங்கை திருச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் ரசாயனப் பொறியியல் துறையும், டெல்லி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்பக் கல்வித் தர மேம்பாட்டுத் திட்டத் துறையும் இணைந்து நடத்தின.
இக்கருத்தரங்கைத் தொடங்கி வைத்த மும்பை ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தரான ஜிடி.யாதவ் பேசுகையில், “தொழில் துறை நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்களுக்கு சகோதரத்துவமான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முறையான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அமைப்பு பொறியியல் மற்றும் நிலையான பாதைகளின் உதவியுடன் கழிவுகளைச் செல்வங்களாக மாற்றலாம். தொழில் துறையும், நிறுவனங்களும் இன்னும் கூடுதலாக இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
திருச்சி: சுற்றுச்சூழலுக்கான சர்வதேச கருத்தரங்கு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:03:00
Rating:
No comments: