இரானில் ஊழல் குற்றச்சாட்டு: பிரபல தொழிலதிபர் 'பிட்டுமெனின் சுல்தான்' தூக்கிலிடப்பட்டார்
பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
''சுல்தான் ஆஃப் பிட்டுமென்'' என அறியப்படும் ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிட்டுமென் என்பது எண்ணெய் சார்ந்த ஒரு பொருள். ஆஸ்பால்ட் உருவாக்குவதற்கு இப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. பிட்டுமென் விற்பனை செய்வது இரானில் மிகவும் லாபகரமான ஒரு தொழில்.
சுமார் மூன்று லட்சம் பிடுமென் கொள்முதல் செய்வதற்காக அவர் போலியாக நிறுவனங்களின் பெயரில் ஆவணம் தயாரித்திருக்கிறார்.
இந்த ஆண்டுதுவக்கத்தில் ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து தூக்கிலடப்பட்ட மூன்றாவது தொழிலதிபரானார் 49 வயது டர்மானி.
கடந்த மாதம் உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொள்வதற்காக, இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக ''தங்க நாணயங்களின் சுல்தான்'' தூக்கிலிடப்பட்டார்.
நீதித்துறையின் மிஜான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி டர்மானி 'முறைகேடு, மோசடி மற்றும் லஞ்ச ஊழல்' மூலமாக சுமார் 100 மில்லியன் டாலர் அளவுக்கு பிடுமென் கொள்முதல் செய்திருக்கிறார். கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.
டர்மானி கொல்லப்பட்ட விதம் குறித்த செய்திகளை இரான் அரசு தொலைக்காட்சி, ஓரு ஆக்ஷன் படத்துக்கான இசைக்கோர்வையுடன் ஒளிபரப்பியது.
நாட்டின் தள்ளாடும் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் இவர்கள் சுரண்டுகிறார்கள், அவர்களை அரசு தண்டிப்பதில் எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்ல செய்தியாளார்கள் அத்தொலைக்காட்சியில் மிகவும் ஆர்வம் காட்டினர்.
கடந்த ஆகஸ்ட் மாதம், புதிய புரட்சிகர நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டது. ஊழல் வழக்குகளை வேகமாக விசாரித்து தீர்ப்பளித்து இதன் பணி. அதன்படி டஜன்கணக்கான தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்தது மற்றும் லஞ்சம் தலைவிரித்தாடியது உணரப்பட்டதால் மக்களிடையே பெருங்கோபம் ஏற்பட்டநிலையில் இந்நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இரானின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது. அதற்கு பகுதியளவு காரணம் அமெரிக்கா இரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை விதித்ததே.
இரானில் ஊழல் குற்றச்சாட்டு: பிரபல தொழிலதிபர் 'பிட்டுமெனின் சுல்தான்' தூக்கிலிடப்பட்டார்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:28:00
Rating:
No comments: