தமிழகத்துக்கு திசை மாறும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!
சென்னை (10 டிச 2018): வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தில் சென்னையில் அல்லது வேறு பகுதியில் கரையை கடக்கும் என்பது குறித்து அடுத்த இரு தினங்களில் தெரிய வரும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தமிழகத்திற்கும் ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளை இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மழையாக கரையை கடக்குமா? அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பது குறித்தும் தெரியவில்லை.
தமிழகத்துக்கு திசை மாறும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:53:00
Rating:
No comments: