இந்துக்களை கொன்று உண்பதாக பரவும் போலி செய்தி – உண்மை என்ன?
“கொடூரமான செய்தி: ஹர்யானாவின் மீவட் நகரில் உள்ள ரோஹின்யாக்கள், இந்துகளை கொன்று அவர்களின் உடல்களை உண்கிறார்கள். இந்த செய்தி உங்கள் உடலை நிச்சியம் நடுங்கச்செய்யும்” என்ற தலைப்பில் போலி செய்திகளை பரப்பும் இணையதளமான டைனிக் பாரத், டிசம்பர் 18-ம் தேதி கட்டுரை ஒன்று வெளியிட்டது. இறந்த உடல்களை மக்கள் வெட்டுவது போல் உள்ள புகைப்படமும் இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்தியை முக்கியமான ஊடகங்கள் யாவும் மறைத்துவிட்டன என்றும் ஹர்யானாவில் உள்ள ஒரே ஒரு உள்ளூர் பத்திரிக்கை மட்டுமே வெளியிட்டுள்ளதாகவும் இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.
மேலும், ஹர்யானாவின் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் மீவட்டில் உள்ள ரோகின்யா அகதிகள், இந்துக்களை கொன்று தின்று வருவதாக ஆஜ் தக் குர்கான் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியை சஞ்சய் திவேதி என்பவர் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்துக்களின் உடலை உண்பவர்கள் மீவட்டில் அகதிகளாக இருகிறார்கள் என ஆஜ் தக் குர்கானின் இணையதள பதிப்பும் கூறுகிறது. ஆஜ் தக் குர்கான் பத்திரிக்கை இந்தியா டுடேவின் ஆஜ் தக் குழுமத்தை சேர்ந்தது அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“ஹர்யானாவின் குட்டி பாகிஸ்தான்” என்று குறிப்பிட்டு மேற்கண்ட செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பிரஷாந்த பட்டேல் உமராவ். இதுபோல் பல தடவை போலி செய்தியை பரப்பிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் உமராவ்.
அவரின் சில ட்வீட்கள் இதோ…
“ஹரியானாவின் மீவட்டில் அமைதியாக தங்க இடம் கொடுத்தால், இந்துக்களை கொன்று உண்பதோடு எல்லா குற்றங்களையும் செய்து வருகிறார்கள் ரோஹின்யாக்கள்”
“40,000-க்கும் மேற்பட்ட ரோஹின்யாக்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர். இது உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகபெரிய ஆபத்தாகும். ஆனால் இந்த விஷயத்தில் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”
“40,000-க்கும் மேற்பட்ட ரோஹின்யாக்கள் இந்தியாவில் தங்கியுள்ளனர். இது உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகபெரிய ஆபத்தாகும். ஆனால் இந்த விஷயத்தில் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”
உண்மை என்ன?
டைனிக் பாரத் தளம் வெளியிட்ட புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடியபோது, அக்டோபர் 2009-ம் தேதி எழுதப்பட்ட வலைப்பதிவில் இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இறந்தவர்களின் உடலை பறவைகளுக்கு கொடுக்கும் நம்பிக்கையில் இதுபோன்ற ஒரு வழக்கத்தை திபெத்தியர்கள் கடைப்பிடிக்கிறார்கள் என வலைப்பதிவு கூறுகிறது. மேலும் இதே புகைப்படத்தை பிரமாஹா பைவான் என்பவர், திபத்தியர்களின் “வான் வழி அடக்கம்” என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
இது சம்மந்தமாக பல வீடியோக்கள் யூ டுயூப்பில் காணக் கிடைக்கின்றன. அதில், இறந்த உடலை வெட்டி துண்டு துண்டாக கழுகுகளுக்கு இறையாக கொடுக்கிறார்கள். இதை கீழுள்ள வீடியோவில் நீங்கள் காணலாம். இப்போது வைரலாகி வரும் போலி செய்தியில் பயன்படுத்தப்படுள்ள புகைப்படமும் இந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டதே. ஆகவே பலர் கூறுவது போல் இந்துக்களை ரோஹின்யாகள் உண்கிறார்கள் என்பது உண்மை அல்ல; இது திபத்திய மக்கள் கடைபிடிக்கும் இறுதிச்சடங்காகும்.
“திபத்திய வான் வழி அடக்கம்” என்பது இறந்தவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் பாரம்பரிய இறுதிச்சடங்காகும். இப்படி மாமிசத்தை உடலில் இருந்து பிரித்தெடுக்கும் வழிமுறை திபத்திய புத்த மதத்தில் பின்பற்றப்படுகிறது. இதன்படி, கழுகுகளின் பார்வைகளுக்கு தெரிவது போல் இறந்த உடல் மலை உச்சியில் வைக்கப்படுகிறது. பிரபஞ்சத்திற்கு தங்கள் வழங்கும் பரிசாக திபத்தியர்கள் இதை கருதுகிறார்கள். முக்கியத்துவமில்லாதது மற்றும் நிலையற்றது நமது வாழ்க்கை என தெரிவிக்கும் விதமாக இந்த பழக்கத்தை பின்பற்றுகிறார்கள் என ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனம் கூறுகிறது. ஆகவே ஆஜ் தக் குர்கான் மற்றும் டைனிக் பாரத் கூறியது பொய் செய்தியாகும்.
தமிழில்: V.கோபி
நன்றி: altnews
நன்றி: altnews
இந்துக்களை கொன்று உண்பதாக பரவும் போலி செய்தி – உண்மை என்ன?
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:41:00
Rating:
No comments: