வளைகுடா நாடுகளில் இறக்கும் இந்தியர்கள்!

வளைகுடா நாடுகளில் இறக்கும் இந்தியர்கள்!

வளைகுடா நாடுகளில் கடந்த நான்காண்டுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா போன்ற நாடுகளில் இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வேலைக்காக தங்களின் கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், பணிபுரிந்து வரும் இவர்கள் பல்வேறு காரணங்களினால் மரணம் அடைகின்றனர். சிலர் சாலை விபத்துகளிலும், உடல்நலக்குறைவாலும் சிலர் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து நேற்று (டிசம்பர் 12) நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார். அப்போது, கடந்த நான்காண்டுகளில் வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார்.
2014-2018ஆம் ஆண்டுக் காலங்களில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் 12,828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 7,877 பேரும், குவைத்தில் 2,932 பேரும், ஓமனில் 2,564 பேரும், கத்தாரில் 1,301 பேரும்,பஹ்ரைனில் 1,021 பேரும் மரணம் அடைந்துள்ளனர். 2016ஆம் ஆண்டில் மட்டும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 6,013 ஆக உயர்ந்துள்ளது.
சாலை விபத்துகளில் உயிரிழப்பது மற்றும் தற்கொலை போன்றவற்றை குறித்து வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
https://minnambalam.com/k/2018/12/13/2
வளைகுடா நாடுகளில் இறக்கும் இந்தியர்கள்! வளைகுடா நாடுகளில் இறக்கும் இந்தியர்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.