ரூ 18 லட்சம் புதிய ரூ 2000 கட்டுகள்:பா.ஜ.க.பிரமுகரிடமிருந்து பறிமுதல்!

ரூ 18 லட்சம் புதிய ரூ 2000 கட்டுகள்:பா.ஜ.க.பிரமுகரிடமிருந்து பறிமுதல்!
சேலம்(27 நவ 2016): சேலம் அருகே பா.ஜ.க.பிரமுகரிடமிருந்து ரூ 18 லட்சம் புதிய 2000 ரூபாய் கட்டுகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்பட குடியிருப்பு அருகே அஸ்தம்பட்டி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ரூ 18 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் மீதம் நூறு ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளும் சேர்த்து சுமார் 20 லடசத்து 55 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது.
வாகனத்தில் இருந்தவர் பா.ஜ.கவைச் சேர்ந்த அருண்ராம் எனவும் அவருடன் அவரது நண்பரும் இருந்தது தெரிய வந்தது. பணத்திற்கு எவ்வித ஆவணமும் இல்லாததை அடுத்து அதனை காவல்துறையினர் கருவூலத்திடம் ஒப்படைத்தனர்.
ரூ 18 லட்சம் புதிய ரூ 2000 கட்டுகள்:பா.ஜ.க.பிரமுகரிடமிருந்து பறிமுதல்! ரூ 18 லட்சம் புதிய ரூ 2000 கட்டுகள்:பா.ஜ.க.பிரமுகரிடமிருந்து பறிமுதல்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.