ஏடிஎம்-கள் முடங்கும் அபாயம்: இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை!


பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யாமல் நேரடியாக மாற்றும் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்ததால், நேற்று வங்கிகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் இன்றும் நாளையும் வங்கிகளுக்கு பொது விடுமுறை.
 
 
கடந்த 15 நாட்களாக பணத்தை மாற்ற மக்கள் பட்ட பாட்டை சொல்லி மாளாதது போல் வங்கி ஊழியர்களும் ஓய்வில்லாமல் மிகுந்த மன அழுத்தத்தின் மத்தியில் இரவு பகல் பாராமல் பணிபுரிந்து வந்தனர்.
 
இந்நிலையில் இன்று நான்காவது சனிக்கிழமை என்பதாலும் நாளை ஞாயிறு என்பதாலும் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது வங்கி ஊழியர்களுக்கு. ஏற்கனவே ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் மணிக்கணக்கில் ஏடிஎம் வரிசையில் நின்று கடைசியில் பணம் முடிந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
 
10 ஏடிஎம்கள் இருக்கும் இடத்தில் ஒரே ஒரு ஏடிஎம் தான் வேலை செய்கின்ற நிலையில் அந்த ஒரு ஏடிஎம் முன் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர் மக்கள். இந்நிலையில் இன்று வார கடைசி நாள் என்பதால் சொல்லவே வேண்டாம் சீக்கிரமாகவே ஏடிஎம்களில் பணம் காலியாகிவிடும்.
 
கடும் கூட்டம் காரணமாக பணம் காலியான பின்னர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப இன்றும் நாளையும் யாரும் வர மாட்டார்கள். விடுமுறை நாள் என்பதால் இந்த இரண்டு நாட்களும் ஊழியர்கள் பணம் நிரப்ப வரமாட்டார்கள். இதனால் இந்த இரண்டு நாட்களும் ஏடிஎம்கள் முடங்கி தீவிரமான பண நெருக்கடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஏடிஎம்-கள் முடங்கும் அபாயம்: இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை! ஏடிஎம்-கள் முடங்கும் அபாயம்: இன்றும் நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.