வாங்காத பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி!


இந்தியாவில் பல்வேறு சேவைகள் நவீனமயமாகிவிட்டது. அதில் பொதுவிநியோக முறையின் கீழ் வரும் ரேஷன் கடைகளும் ஒன்று.குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் அட்டைகளாக மாற்றி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக குடும்ப அட்டைகளில் உள்ள விவரங்களுடன் அட்டைதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள், குடும்ப தலைவரின் செல்பேசி எண் போன்ற விவரங்கள் அனைத்தும் விற்பனை முனையத்தில் சிறிய அளவிலான இயந்திரத்தில் பதிவு செய்யப்படுகிறது. மேலும், அந்த முனையத்தில் இணைக்கப்பட்ட செல்பேசி எண்ணிற்கு ரேஷன் கடைக்கு வந்துள்ள பொருட்கள், அவற்றின் இருப்பு விவரங்கள் குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும். அதே போல், ’பாயிண்ட் ஆஃப் சேல்ஸ்’ என்ற அதிநவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் வாங்கும் பொருட்களின் அளவு இந்த கருவியில் பதிவு செய்யப்பட்டு பயனாளர்களின் செல்பேசிக்கு குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும்.
இந்நிலையில் வாங்காத பொருட்களை வாங்கியதாக செல்பேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது என சேலம் மக்கள் குற்றம் சட்டியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆஃப் சேல்ஸ் என்ற கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. முறைகேடுகளைத் தடுப்பதற்காக இந்த கருவி அறிமுகப்படுத்தப்பட்டாலும், வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், சேலம் அன்னதானப்பட்டி நடேசன் நகரில் உள்ள ரேஷன் கடையில் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல், இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இதேபோன்று புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.

வாங்காத பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி! வாங்காத பொருட்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி! Reviewed by நமதூர் செய்திகள் on 06:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.