மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது - கொளத்தூர் மணி எச்சரிக்கை


சென்னை: தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்படும் இப்போதுதான் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1956-ம் ஆண்டு வரை சென்னை மாகாணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷாவின் பகுதிகள் இணைந்து இருந்தன. ஆனால் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.


பிரிந்ததும் இணைந்ததும்... அப்போது தமிழகத்தின் திருப்பதி, திருத்தணி, உள்ளிட்ட பல பகுதிகள் ஆந்திராவோடு சேர்க்கப்பட்டன. கன்னியாகுமரி, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு கேரளாவுடன் இணைக்கப்பட்டது. கொள்ளேகால், காவிரி பிறக்கும் குடகு, கோலார் தங்கவயல் உள்ளிட்டவை கர்நாடகாவோடு இணைந்தன. உயிர்த்தியாகங்கள்.. திருத்தணியும் கன்னியாகுமரியும் உயிர்த் தியாகங்களுக்குப் பின்னர் தாய்த் தமிழகத்தோடு இணைந்தன. இன்னமும் தமிழகத்தில் எல்லை மீட்புப் போராட்டங்கள் தொடர்கின்றன. சென்னை மாகாணம் மொழிவழி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 

தனித்தமிழ்நாடு கோரிக்கை இல்லை இதையொட்டி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் 'காலத்தின் குரல்' நிகழ்ச்சியில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாஜகவின் கே.டி. ராகவன், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருகின்றன. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இன்று தனித் தமிழ்நாடு போன்ற பேச்சுகள் போய் இந்தியா என்ற பரந்துபட்ட பார்வை மக்களிடத்தில் இருக்கிறது என்று கூறினார். 


இப்போதுதான் உருவாகிறதூ.. இதைமறுத்த கொளத்தூர் மணி, கேடி ராகவன் தனித்தமிழ்நாடு கோரிக்கை எல்லாம் போய்விட்டது என்று கூறினார். ஆனால் இப்போதுதான் அது உருவாகிக் கொண்டு வருகிறது. இப்போது உரிமை மறுக்கப்படுகிறபோது, என்னுடைய மாநிலத்தின் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக என்னுடைய மொழி இல்லை என்கிறபோது அல்லது என்னுடைய மொழியை என்னுடைய மாநிலத்தில் பயிற்று மொழியாக கொண்டுவருவதற்கு தடைகள் வருகிற போது அதற்கு எங்கோ இருக்கிற உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்குகிறபோது 'அதைப் பற்றி' (தனித்தமிழ்நாடு) மீண்டும் சிந்திக்கிற சூழல் இப்போதுதான் உருவாகியுள்ளது என்றார்.
மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது - கொளத்தூர் மணி எச்சரிக்கை மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது - கொளத்தூர் மணி எச்சரிக்கை Reviewed by நமதூர் செய்திகள் on 00:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.