மக்கள் நலக் கூட்டணி பயணம் முடிந்து விட்டதா?


ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது தமிழகத்தில் கட்சிகள் போராட்டங்களை நடத்துகின்றன. குறிப்பாக திமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகளே போராட்டங்களை நடத்தும் நிலையில், மக்கள் நலக் கூட்டணி அது பற்றி எதுவும் பேசவில்லை. குறிப்பாக மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ. கலிங்கப்பட்டு டாஸ்மாக் மூடப்பட்ட விவகாரத்தில் கடைசியாக கருத்துச் சொன்ன பிறகு எதுவுமே பேசாமல் உள்ளார். ரூபாய் நோட்டு அறிவிப்பு வந்தபோது ஆதரித்து அறிக்கை வெளியிட்ட வைகோ, இப்போது அமைதியாக இருக்கும் நிலையில், சமீபத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் சொன்ன கருத்தும் அதையொட்டி நிலவிய மவுனமும்தான். கடந்த செவ்வாய்க்கிழமை (22-11-2016) அன்று தூத்துகுடியில் பேசிய தா. பாண்டியன், “மக்கள் நலக் கூட்டணியைப் பற்றி அதில் உள்ள நால்வரிடம்தான் கேட்க வேண்டும்" என்றார். “இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அந்த அணியில் உள்ளாரே” என மீண்டும் கேள்வி எழுப்பியபோது, “மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடுகளில் தொடக்கத்தில் இருந்தே நான் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டணி உள்ளதா என்பது குறித்து எனக்குத் தெரியாது” என பதிலளித்தார் தா.பாண்டியன்.
இது பற்றி ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, “அது அவருடைய கருத்து” என்றார். ஆனால், திருமாவோ “மக்கள் நலக் கூட்டணி உயிர்ப்போடுதான் இருக்கிறது. வருகிற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் எங்களுடைய அரசியல் மாநாட்டில் இடதுசாரிகள் கலந்து கொள்வார்கள்” என்று கூறியிருக்கிறார். மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளார் வைகோ, திருமா மீது உருவான அதிருப்தியோடு கம்யூனிஸ்டுகளும் தங்களை வேறு மாதிரி பார்க்கிறார்கள் என்ற வருத்தத்தில் இருப்பதால் மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலம் ஏற்கனவே கேள்விக்குள்ளான நிலையில் வருங்காலங்களில் அது அரசியல் களத்தில் பயணிப்பது சந்தேகம்தான் என்கிறார்கள் சிறுத்தை தொண்டர்கள்.
மக்கள் நலக் கூட்டணி பயணம் முடிந்து விட்டதா? மக்கள் நலக் கூட்டணி பயணம் முடிந்து விட்டதா? Reviewed by நமதூர் செய்திகள் on 03:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.