மோடியை விமர்சித்ததால் தூர்தஷன் தொலைகாட்சி நிருபருக்கு கொலை மிரட்டல்

மோடியை விமர்சித்ததால் தூர்தஷன் தொலைகாட்சி நிருபருக்கு கொலை மிரட்டல்

கருப்புப் பணத்தையும் கள்ளபப்னத்தையும் ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கபப்ட்டது. இந்த அறிவிப்பை மோடி தொலைக்காட்சியில் தோன்றி கூறினார். அது நேரலை என்று கூறப்பட்டது. ஆனால் தூர்தஷன் தொலைகாட்சி நிருபரான சத்யேந்திர முரளி என்பவர் அந்த காட்சிகள் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டவை என்றும் அவை நேரலை அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் அதனை நிரூபிக்க தன்னிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முரளியின் குற்றச்சாட்டுகளாவது,
மோடியின் பேச்சு அது ஒளிபரப்பட்டதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே எழுதப்பட்டது. அந்த பேச்சு பதிவு செய்யப்பட்டு எடிட் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன.
ஊடகங்கள் அனைத்தும் அந்த காட்சியை நேரலை என்று கூறி ஒளிபரப்ப கேட்டுக்கொள்ளப்பட்டன. தூர்தஷனும் அதனை அப்படியே பின்பற்றியது.
இதிலிருந்து குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற முடிவு முன்னதாகவே எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. நவம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தான் ரிசர்வ் வங்கி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அரசிடம் அறிவித்தது என்பது போலியான கூற்று.
மோடியின் உரை அடங்கிய வீடியோ காட்சியை ஆராய்ந்தால் அது பல இடங்களில் எடிட் செய்யப்பட்டது தெரியவரும். இவை விஷுவல் எஃபகட் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன.
இதுவே மோடியின் உரை மீதான முரளியின் குற்றச்சாட்டுகள்.
மோடியின் உரை மீது இத்தகைய குற்றங்களை சுமத்தியுள்ள முரளி அது குறித்து தகவல் அறியும் விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளார். இந்த முடிவு பிரதமர் அலுவலகம் எடுத்த போதிலும் இதன் RTI விண்ணப்பம் தகவல் மற்றும் ஒளிபரப்புதுறைக்கும் நிதி அமைச்சகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது என்று முரளி கூறியுள்ளார்.
தனது தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் கீழ்க்கண்ட கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
பிரதமரின் உரை நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதா?
அப்படியென்றால் அந்த வீடியோவின் மூல பதிவு வெளியிடப்பட வேண்டும் அல்லது பார்வையிட அனுமதிக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட ரூபாய் செல்லாதது என்ற முடிவு எப்போது எடுக்கப்பட்டது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் மக்கள் முன் சம்ர்பிக்கப்பட வேண்டும்.
புதிய 2000 ரூபாய் அச்சிட எப்போது முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட வேண்டும்.
இந்த அறிவிப்பில் இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் பணபரிமாற்ற விதிகள் 1961 மற்றும் ரிசர்வ் வங்கி சட்டம் 1934 ஆகியன பின்பற்றப்பட்டதா?

புதிய 2000 ரூபாய் அச்சிடப்படுவதர்கான அறிவிப்பு தெரியப்படுத்தப்பட்டதா?
என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரின் இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அவருக்கு தொலைபேசி வாயிலாக பல கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் அவரை கடத்தப் போவதாகவும் சிலர் அவரை கொலை செய்துவிடுவதாகவும் தொலைபேசி அழைப்பு விடுத்து மிரட்டியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களும் பறப்பப்பட்டு வருகிறது. மோடியின் ஆதரவாளர்கள் முரளியின் ஃபேஸ்புக் பக்கத்தில் அநாகரிகமான ஆபாச வார்த்தைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முரளி, நவம்பர் 24 ஆம் தேதி டில்லி இந்திய பிரஸ் கிளப்பில் வைத்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், 8 ஆம் தேதி மோடி தொலைகாட்சியில் பேசியது முன்னதாக பதிவு செய்யப்பட்ட காட்சி என்று தான் கூறியதாகவும் அந்த சந்திப்பில் அவர் தனது தொலைபேசி எண்னையும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து வந்த பெரும்பாலான அழைப்புகள் அவரை பாராட்டி வந்ததாகவும் ஆனால் சிலர் அவருக்கு மிரட்டல் விடுத்தும் ஆபாச வார்த்தைகளை கூறி திட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தான் பணியாற்றும் தூர்தஷன் அதிகாரிகளிடம் கூறியதாகவும் ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் காவல்நிலையத்தில் புகாரளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தன்னை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை தான் எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பை தொடர்ந்து டில்லி கோபர்நிகஸ் சாலையில் உள்ள தூர்தஷன் அலுவலகத்திற்கு அவரது மதியம் 1:30  மணி பணிநேரத்திற்கு சென்றுள்ளார் முரளி. அலுவலகம் சென்று ஒரு மணி நேரம் கழித்து செய்தி இயக்குனரை சந்திக்க அழைக்கப்பட்ட முரளி மாலை 5:45க்கு வீடு திரும்பியுள்ளார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பை தொடர்ந்து முரளி அவரது அலுவலகத்தில் வைத்து தாக்கப்படலாம் என்று அவருடன் பணியாற்றிய ஒருவர் கூறியதால் தனது வழக்கமான பணி நேரங்களில் பணி செய்வதை முரளி தவிர்த்து வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த பிரச்னையை நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்ல இருப்பதாகவும் அதற்காக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை நாடியுள்ளதாகவும் முரளி தெரிவித்துள்ளார். மோடியின் அறிவிப்பு  வெளியாகி இத்துனை நாள் காத்திருந்தது ஏன் என்று அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தன்னுடைய கூற்றை உண்மைப்படுத்தும் ஆதாரங்களை இத்தனை நாள் சேகரித்ததாகவும் தற்போது தன்னிடம் அதனை நிரூபிக்க போதுமான வீடியோ, ஆடியோ, ஆவணங்கள் போன்ற ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோடியை விமர்சித்ததால் தூர்தஷன் தொலைகாட்சி நிருபருக்கு கொலை மிரட்டல் மோடியை விமர்சித்ததால் தூர்தஷன் தொலைகாட்சி நிருபருக்கு கொலை மிரட்டல் Reviewed by நமதூர் செய்திகள் on 21:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.