சென்னையில் ‘ஐந்து கவிதை நூல்கள்’ அறிமுகக் கூட்டம்!


நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. அதிலும் கவிதைகளில் குறிப்பிடும்படியாக பல்வேறு கவிஞர்கள் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். அத்தகைய முக்கியமான ஐந்து கவிஞர்களான குட்டிரேவதி, சுகிர்தராணி, தமயந்தி,
தேன்மொழி தாஸ், உமாதேவி ஆகியோருடைய நூல்களின் அறிமுகக் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கவிஞர் குட்டி ரேவதியின் ‘காலவேக மத யானை’யைப் பற்றி கவிஞர் வெயில் உரையாற்றுகிறார். கவிஞர் தமயந்தியின் ‘என் பாதங்களில் படரும் கடல்’ நூலைப்பற்றி கவிஞர் பச்சோந்தியும், கவிஞர் சுகிர்தராணியின் ‘இப்படிக்கு ஏவாள்’ கவிதைத் தொகுப்பை பற்றி கவிஞர் சூரியதாஸும் பேச உள்ளனர். ‘நிராசைகளின் ஆதித்தாய்’ என்ற கவிதைத் தொகுப்பை எழுதிய கவிஞர் தேன்மொழி தாஸின் படைப்பை பற்றி அபிலாஷ் கருத்துகளைப் பகிரவுள்ளார். கவிஞர் உமாதேவியின் ‘தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது’ நூலைப்பற்றி எழுத்தாளர் மாரி செல்வராஜ் தன் எண்ணங்களை எடுத்துரைக்க உள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை (20.11.16) மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூர் பரிசல் புத்தக நிலையத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தை, பரிசல் பதிப்பகத்தின் ஒத்துழைப்புடன் ஆகுதி பதிப்பகம் ஒருங்கிணைக்கிறது.
சென்னையில் ‘ஐந்து கவிதை நூல்கள்’ அறிமுகக் கூட்டம்!  சென்னையில் ‘ஐந்து கவிதை நூல்கள்’ அறிமுகக் கூட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.