நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசும்; வானிலை ஆய்வு அமையம் எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் நாளை வழக்கத்தை விட அதிக அளவு வெயில் இருக்கும் என்றும், அனல் காற்றும் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் நாளை வழக்கத்தை விட அதிகமாக வெயில் இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, தர்மபுரி, வேலூர், நாகை, புதுக்கோட்டை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், ஈரோடு ஆகிய 18 மாவட்டங்களில் அனல் காற்று வீசும். எனவே பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், என சென்னை வானியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் 18 மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 
நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசும்; வானிலை ஆய்வு அமையம் எச்சரிக்கை நாளை 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசும்; வானிலை ஆய்வு அமையம் எச்சரிக்கை Reviewed by நமதூர் செய்திகள் on 22:17:00 Rating: 5

No comments:

Powered by Blogger.