மனநிலை பாதிக்கப்பட்டவாறு சித்தரித்து விவசாயிகள் போராட்டம்! ...

மனநிலை பாதிக்கப்பட்டவாறு சித்தரித்து விவசாயிகள் போராட்டம்! ...

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் 37வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இன்று(ஏப்ரல்-19) 37வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க நடவடிக்கை வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றுகூறி உணவு, தங்குமிடம் போன்ற அடிப்படை வசதியின்றி, பல்வேறு இன்னல்களுக்கு நடுவே போராட்டத்தை உறுதியாக நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்காமல் அமைதியாகவே உள்ளது. இந்நிலையில், இன்று மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாக மாறி ஜந்தர் மந்தர் வீதியில் சுற்றித் திரியும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் என்பதை சித்தரிக்கும்விதத்தில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவாறு சித்தரித்து விவசாயிகள் போராட்டம்! ... மனநிலை பாதிக்கப்பட்டவாறு சித்தரித்து விவசாயிகள் போராட்டம்! ... Reviewed by நமதூர் செய்திகள் on 04:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.